அதிக நேரம் செலவிடாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆசனங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
யோகாவை தினமும் பயிற்சி செய்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த காரணத்திற்காக, இதை வழக்கமாக்கி கொள்ளும்படி பல சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.யோகா செய்வது, உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.மேலும் தீவிர நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.யோகா செய்வது, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், இதய நோய் அபாயத்தைக் குறைப்பதிலும், சர்க்கரை நோய், இரத்த கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகுக்கிறது.பெரும்பான்மையவருக்கு தினமும் செய்ய வேண்டிய யோகாசனங்களை பற்றிய குழப்பம் நிலவுகிறது. மேலும் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், வீட்டிலிருந்தபடியே, அதிக நேரம் செலவிடாமல் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்களுக்கான பதிவிது. நீங்கள் தினமும் எளிதாகப் பயிற்சி செய்யக்கூடிய 5 யோகாசனங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினசரி செய்யவேண்டிய யோகாசனங்கள்
கோமுகாசனம் (Gomukhasana)
இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது, உங்களுக்குப் பல நன்மைகளைத் தரும். உங்கள் கணுக்கால், இடுப்பு மற்றும் தொடைகளின் நீட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேல் முதுகு, மார்பு மற்றும் தோள்களை நீட்சியடையச்செய்து, அலர்தலுக்கும் உதவுகிறது.
விருக்ஷாசனம் (Vrikshasana)
உடலின் சமநிலையை மேம்படுத்த, இந்த யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்யலாம்.இடுப்பின் வெளிப்புற பகுதியை வளைக்கும் இந்த யோகா மூலம் உங்கள் முதுகெலும்பை வலுவாக்கலாம். இது பாதங்கள் மற்றும் கணுக்கால்களை வலிமையாக்க உதவுகிறது. மேலும், உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன நிம்மதியும் அளிக்கிறது.கவனச் சிதறல் ஏற்படாமல் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை வளர்க்க விரும்புபவர்கள் விருக்ஷாசனம் செய்யலாம்.
திரிகோனாசனம் (Trikonasana)
உச்சந்தலை முதல் பாதம்வரை, உடலை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாகக் கருத்தப்படுகிறது இந்த யோகாசனம். இது உங்கள் கால்கள், முதுகு மற்றும் மார்பை பலப்படுத்துகிறது. மேலும், தொடைத் தசைநார்கள், கெண்டைக்கால்கள் மற்றும் தோள்களை நீட்சியடையச்செய்யவும் உதவுகிறது.
பஸ்சிமோத்தாச்சனம் (Paschimottanasana)
உங்களுக்குத் தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த யோகாசனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலுக்குச் சுறுசுறுப்பைத் தருவதோடு, கவலை, மன அழுத்தம் போன்றவற்றை நீக்கவும் உதவுகிறது. மூளையை அமைதிப்படுத்தி, விரைவாகத் தூங்க உதவுகிறது.
தண்டாசனம் (Dandasana)
ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள், இந்த யோகாசனத்தைப் பயிற்சி செய்து நல்ல பலன்களைப் பெறலாம். இது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதனுடன், தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் இறுக்க பிரச்சனையையும் நீக்குகிறது.
யோகா நிபுணரின் அறிவுரைப்படி, பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் இந்த யோகாசனங்களை நீங்கள் பயிற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்தால் கூடப் போதுமானது. இதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
image source: freepik