இதய ஆரோக்கியத்தை வீட்டிலேயே சரிபார்க்க வேண்டுமா - இந்த 5 எளிய சோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

  • SHARE
  • FOLLOW
இதய ஆரோக்கியத்தை வீட்டிலேயே சரிபார்க்க வேண்டுமா - இந்த 5 எளிய சோதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

வீட்டிலேயே சில எளிய சோதனைகளின் உதவியுடன் உங்கள் இதய ஆரோக்கியத்தை சரிபார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை வீட்டிலேயே சரிபார்ப்பது எப்படி: மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் பல உடல் நல பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்சனைகளில் மிகவும் பொதுவானது இதய நோய். தற்சமயம், இதய நோய்கள் பிரச்சனை மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது, அதே போல் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற இதய நோய்களால் ஏற்படும் இறப்பு நிகழ்வுகளும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. மோசமான இதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்குத் திடீர் மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், அதைக் கவனித்துக்கொள்வதும் மிகவும் முக்கியம். நம் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை வீட்டில் கண்டறிய முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்காக, கிரேட்டர் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனையின் இருதயவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுபேந்து மொஹந்தியிடம் பேசினோம். வீட்டிலேயே இதய ஆரோக்கியத்தை சரிபார்க்க உதவும் 5 எளிய சோதனைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலேயே இதய ஆரோக்கியத்தை சரிபார்ப்பது எப்படி

படிக்கட்டுகள் சோதனை

உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பார்க்கலாம். ஆய்வுகளின்படி, ஒருவரால் 45 வினாடிகளில் வழக்கமான நான்கு மாடிகளை ஏற முடிந்தால், அவரது இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 60 படிகளை ஏறுவதற்கு 90 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும், ஏனெனில் இது மோசமான இதய ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இதயத் துடிப்பை சரிபார்த்தல்

நம் இதய ஆரோக்கியத்தை கண்டறிவதற்கு ஒரு முக்கிய நிலை காட்டியாக இதயத்துடிப்பு திகழ்கிறது. எந்தக் கருவிகளும் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் இதயத் துடிப்பை எளிதாகச் சரிபார்க்கலாம். ஆனாலும் இயற்கையாகவே, நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் அல்லது உடலை எவ்வளவு வருத்திக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் இதயத்துடிப்பு மாறுபடும்.நாம் தூங்கும்போது அல்லது ஓய்வெடுக்கும்போது, ​​​​இதயம் மெதுவாகத் துடிக்கிறது. அதே சமயம், உடற்பயிற்சியின்போது அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும் சூழ்நிலைகளின்போது இதய துடிப்பு அதிகரிக்கிறது.

ஓய்வில் இருக்கும்போது இதயத் துடிப்பு பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்

பொதுவாகப் பெரியவர்களின் தூக்கம் அல்லது ஓய்வின்போது, ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இதயம் துடிக்கிறது. உங்கள் இதயத் துடிப்பு இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். ஓய்வின்போது குறைந்த இதயத் துடிப்பு இருப்பது குறைந்த உடல் தகுதி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஆபத்து மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்ச இதய துடிப்பு பரிசோதனை செய்யுங்கள்

உடற்பயிற்சி அல்லது பிற உடல் செயல்பாடு மற்றும் விளையாட்டுகளின்போது இதயத் துடிப்பு அதிகரிப்பது இயல்பானதே. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிப்பதால் உடல் செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குச் சிரமமாக இருந்தாலோ, மருத்துவரை அணுகி இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதய நோயின் அறிகுறிகளை அங்கீகரிக்கவும்

மார்பு வலி, இறுக்கம், மூச்சுத் திணறல், மூட்டுகள், கணுக்கால் அல்லது பாதங்களின் வீக்கம், மேல் முதுகு அல்லது முதுகு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, இதயத் துடிப்பில் மாற்றம், பலவீனம், தலைசுற்றல், கைக்கால்களில் உணர்வின்மை, உடல் செயல்பாடுகளின்போது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள், ​​நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை மோசமான இதய ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றை அடிக்கடி சந்தித்தால் மருத்துவரை அணுகவும்.

ஆரோக்கியமான இதயத்திற்கான குறிப்புகள்

  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.
  • கெட்ட கொழுப்புகளுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
  • பசுமையான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய உட்கொள்ளுங்கள்
  • ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
  • ஜிம்மில் வழக்கமான 30 நிமிட உடற்பயிற்சி அல்லது யோகா அல்லது மற்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
  • BP மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும்.
  • பதட்டம், மன அழுத்தம் போன்ற மன நிலைகளைக் கட்டுப்படுத்துங்கள்.
  • போதுமான அளவு நல்ல தூக்கத்தை வழக்கமாக்குங்கள்.
  • சர்க்கரை மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
  • Images credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்