Doctor Verified

இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!

இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!
  • SHARE
  • FOLLOW
இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!

Heart Blockage in Women: இதய அடைப்பின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் இதய நோயைத் தவிர்க்கலாம்.

பெண்களின் இதய அடைப்பு அறிகுறிகள்: இதய அடைப்பும் மாரடைப்பும் வெவ்வேறு.மாரடைப்பு என்பது இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகிறது. ஆனால் இதய அடைப்பு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த இதய அடைப்புப் பிரச்சனை பெண்களிடையே மிகவும் பொதுவானதாக ஆகிவிட்டது.மோசமான வாழ்க்கை முறையே இதற்கான முக்கிய காரணம். இதயத்தில் அடைப்பு, மருத்துவ மொழியில் கரோனரி ஆர்டரி டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இதயத்தில் அடைப்பு இருப்பது ஒரு தீவிரமான நோயாகும்.

இதய அடைப்பு எப்போது ஏற்படுகிறது?

மயோ கிளினிக்கின் கூற்றுப்படி, உங்கள் இதய தசைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் வேலையைச் சரியாகச் செய்யாதபோது இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக, அதிகப்படியான கெட்ட கொழுப்பு மற்றும் இரத்த நாளங்களில் படிந்து இருக்கக்கூடிய அதிகப்படியான கெட்ட கொழுப்பு போன்ற காரணங்களினால் இதய அடைப்பு ஏற்படுகிறது. தமனி(arteries) சார்ந்த நோய், அதிகப்படியான கெட்ட கொழுப்பால் மட்டுமே ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்பின் நிலை தமனித்தடிப்பு என்று அழைக்கப்படுகிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்கும்போது, அது உடலில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. மேலும் உங்கள் இதயம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்குக் குறைவான இரத்த ஓட்டமே இருக்கும். உங்கள் இரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பித்து, அடைத்து, தடைப்படும். இது மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு, நெஞ்சுவலி போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.

பெண்களின் இதய அடைப்பை அறிகுறிகள் வைத்துக் கண்டறிய முடியுமா?

மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, ஒரு பெண்ணுக்கு இதய அடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால், அதன் அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்டறிந்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.பெண்களுக்கு ஏற்படும் இதய அடைப்புக்கான அறிகுறிகளையும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதய அடைப்பின் ஆரம்ப அறிகுறிகள்

  • மார்பில் அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல்.
    • நெஞ்சு வலி, இறுக்கம் மற்றும் அழுத்தம் போன்ற பிரச்சனைகள்
      • அடிக்கடி ஏற்படும் குமட்டல் உணர்வு
        • கழுத்து, தாடை, தொண்டை, வயிறு மற்றும் முதுகு என உடலின்
          • பல்வேறு பகுதிகளில் வலி ஏற்படுதல்.
            • இரத்த நாளங்கள் சுருங்குவதால் வலி ஏற்படும்.உணர்வின்மை, பலவீனம் மற்றும் மிகவும் குளிராக உணர்வது போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம்.
            • இதய அடைப்பைத் தடுக்கும் வழிகள்

              மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, இதய அடைப்பைத் தடுக்க , உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

              • புகை பிடிப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.
                • உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.ஓட்டம், நடைபயிற்சி, நீச்சல், ஸ்கிப்பிங் மற்றும் யோகா போன்ற சில எளிதான உடற்பயிற்சிகளை, 30-60 நிமிடங்களுக்குச் செய்யுங்கள்.
                  • ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள்.
                    • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள்.
                      • பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற வற்றை தவிர்த்திடுங்கள்.
                        • போதுமான நல்ல தூக்கத்தை உறுதிசெய்யுங்கள்.
                          • மருத்துவரிடம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
                            • உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும்.
                            • மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் அடிக்கடி அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.அவர் உங்கள் நிலைக்கான காரணங்களைக் கண்டறிந்து, தேவையான சிகிச்சையை வழங்குவார்.

                              All Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்