பொதுவாகத் தூக்கமின்மையால் எரிச்சல், கோபம், சோம்பல், சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, வயிறு சார்ந்த பிரச்சனைகள் போன்றவை காணப்படலாம்.
தூக்கமின்மையின் அறிகுறிகள்:
நாள் முழுவதும் சோர்வு, படுக்கைக்குச் சென்றபிறகு பல மணி நேரங்கள் வேலை செய்வது, அடிக்கடி புரண்டு படுப்பது, மொபைலைப் பார்ப்பது, சில சமயங்களில் சுவரைப் பார்த்து, தூக்கம் சிறிது நேரமே என்று தன்னைத்தானே நம்ப வைக்க முயற்சிப்பது.இவை அனைத்தும் தூக்கத்தை இழக்க செய்யும் தூக்கமின்மை நோயால் உண்டாகிறது. தூக்கமின்மை பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. பொதுவாகத் தூக்கமின்மையால் எரிச்சல், கோபம், சோம்பல், சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்றவை காணப்படலாம்.பெரும்பாலும் பெரியவர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை எளிதாகக் கண்டறியலாம். ஆனால் இதன் அறிகுறிகளைச் சிறு குழந்தைகளிடம் கண்டறிவது கொஞ்சம் கடினமான விஷயம். அதனால்தான் குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மையின் அறிகுறிகளை இந்தப் பதிவின் மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளோம், அதைப் பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டாம்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மைக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
எந்த வயதிலும் குழந்தைகளுக்குத் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சனை 6 மாதங்கள் முதல் இளமை பருவம்வரை நீடிக்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மையின் அறிகுறிகள் பின்வருமாறு:
- இரவு காலதாமதமாகத் தூங்கி காலையில் எழுவதை சொல்லாமல் இருத்தல்.
- இரவில் அடிக்கடி விழிப்பதால் மீண்டும் தூங்குவதில் சிக்கல் ஏற்படுதல்.
- பகலில் பலமுறை 10 முதல் 15 நிமிடங்கள் வரையிலான சிறுதூக்கம்.
- விளையாடுவதற்கு பதிலாக அமைதியாக உட்கார்ந்து இருத்தல்.
- வழக்கமான உணவு உட்கொள்ளும் அளவை குறைத்தல்.
- எப்போதும் சோம்பலாக உணர்தல்.
- சிறிய விஷயங்களுக்கு எரிச்சலாகி கோபப்படுதல்.
- 1 முதல் 2 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு 16 மணி நேரம் தூக்கம் அவசியம்.
- 2 மாதங்கள் முதல் 1 வருடம் வரையுள்ள குழந்தைகள் 12 முதல் 14 மணி நேரம்வரை தூங்குவது நல்லது.
- 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை தூங்குவது போதுமானது.
- 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 9 முதல் 11 மணி நேர தூக்கம் அவசியம்.
- 13 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 10 மணி நேரம் தூக்கம் போதுமானது.
குழந்தையின் தூக்கமின்மைக்கான காரணங்கள்
கெட்ட கனவுகள்: பல சமயங்களில் கெட்ட கனவுகளால் தூங்குவதில் பிரச்சனைகள் உண்டாகலாம்.உங்கள் இளைய பிள்ளைகள் டிவி, மொபைல் அல்லது லேப்டாப்பில் வீடியோக்களைப் பார்த்தால் அதைச் சார்ந்த கனவுகள் வரக்கூடும். எனவே உங்கள் குழந்தைகள் டிவி அல்லது மொபைலில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனிக்கவும். தூங்குவதற்கு முன் டிவி அல்லது மொபைல் கொடுப்பதற்கு பதிலாக நல்ல அழகான படங்களைக் கொண்ட கதை புத்தகங்களைப் படிக்கலாம். இது அவர்களுக்குப் புத்தகம்மேல் உள்ள ஆர்வத்தை அதிகரிப்பதோடு நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத் தரும்.
சுற்றுச்சூழலின் காரணமாக: சில சமயங்களில் சுற்றியுள்ள இரைச்சல், வெப்பம் அல்லது குளிர் போன்ற காரணங்களாலும் குழந்தைகள் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே குழந்தைகள் தூங்கும் அறையின் வெப்பநிலை சீராகவும், சுற்றி எல்லாப் பக்கங்களிலும் தூங்குவதற்கு ஏற்ற அமைதியான சூழல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கஃபீன் உட்கொள்ளல்: இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்க்ஸ், சோடா போன்றவற்றை சிறு வயதிலிருந்தே கொடுக்கத் தொடங்குகிறார்கள். குளிர் பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்றவற்றில் நிறைய கஃபீன் காணப்படுகிறது. சிறு குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.
மருந்துகளின் பக்கவிளைவுகள்: பருவகால நோய்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற, சிறு குழந்தைகளுக்கு அதிக மருந்தளவுகள் கொடுக்கப்பட்டாலும் தூக்கமின்மை ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் சரியானது?
குழந்தையின் சரியான உடல் மற்றும் மன வளர்ச்சிக்குப் போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் வயதை பொறுத்து அவரின் தூங்கும் நேரம் மாறுபடுகிறது.
images source: freepik