மேக்கப் இன்றி இயற்கை அழகுடன் ஜொலிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது, படித்துப் பலன் பெறுங்கள்.
பெரும்பாலும் பெண்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது பிடிக்காது.எப்போதும் தன் அழகு குறித்த சிறு பெருமிதமும் பெண்களுக்கு உண்டு.பெரும்பாலான பெண்கள், மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் இருக்கவே விரும்புகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன.சரும பிரச்சனைகளை மறைத்துத் தங்கள் அழகை மேம்படுத்த மேக்கப் தேவைப்படுகிறது. இரசாயனம் கலந்த இந்த மேக்கப் தயாரிப்புகளைப் பயன்படுத்த விரும்பாத பெண்கள், இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம். மேக்கப் இல்லாமலும் இயற்கை அழகுடன் உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கலாம். இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ள ஐந்து குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
முகத்திற்கு மசாஜ் செய்தல்
நீங்கள் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்க விரும்பினால், உங்கள் முகத்திற்கு தவறாமல் மசாஜ் செய்யுங்கள். முகத்திற்கு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், சருமம் தளர்வடையாமல், பளபளப்புடன் இருக்கும். தொடர்ந்து முகத்திற்கு மசாஜ் செய்வது சருமத்தை இயற்கையாகவே அழகாக்கும். சீனாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தைத் தவறாமல் மசாஜ் செய்கிறார்கள். முகத்தின் சில புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கிறார்கள், இது சருமத்தில் ஏற்படும் பதற்றத்தை குறைக்கிறது.
முடி பராமரிப்பு
அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடி உங்கள் அழகு மற்றும் ஆளுமையை மேம்படுத்துகிறது. அழகான, பளபளப்பான கூந்தலுக்கு முறையான பராமரிப்பு அவசியம். உங்கள் தலைமுடியை தூசி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கவும்.
வறண்ட, உயிரற்ற கூந்தல் உங்கள் தலைமுடியின் தோற்றத்தைக் கெடுத்துவிடும். அழகான முடிக்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவுங்கள். மசாஜ் செய்வது உங்கள் தலைமுடி அடர்த்தியாக, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
பற்கள் பராமரிப்பு
முத்து போன்ற பற்கள் உங்கள் அழகை மேம்படுத்தும். பற்கள் உங்கள் ஆளுமையை நிர்ணயிக்கின்றன. 6 மாதங்களுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து, உங்கள் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளவும். பல் தேய்ப்பதற்கு நல்ல மென்மையான டூத்பிரஷ் மற்றும் டூத்பேஸ்டை பயன்படுத்தவும். சாப்பிடுவதற்கு முன், பின் மவுத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கவும். உங்கள் பற்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள். பளபளப்பான பற்களுடன், உங்கள் வாழ்வில் நம்பிக்கையும் பிரகாசிக்கும்.
சரியாகப் பொருந்தக்கூடிய ஆடைகளை அணிதல்
சரியான உடையணிவது, நல்ல ஆளுமையைக் காட்டுகிறது. சரியான ஆடையுடன், நீங்கள் அழகாக, சௌகரியமாக இருக்க முடியும். உங்களுக்கு ஏற்ற நல்ல, பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்யுங்கள்.மிகவும் இறுக்கமான அல்லது தளர்வான ஆடைகள் உங்கள் ஆளுமையைப் பாதிக்கலாம்.உங்கள் அளவு மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கிரீன் டீ குடித்தல்
கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் பருமனைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமத்தை மேம்படுத்தவும் கிரீன் டீ உதவுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள கேட்டசின்கள்(catechins), செல்களைச் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது. கிரீன் டீ இரத்த ஓட்டத்திற்கு மிகவும் நல்லதென சொல்லப்படுகிறது.
image source: freepik