இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்

  • SHARE
  • FOLLOW
இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்

பாதாம் மற்றும் குங்குமப்பூ கிரீம்: குங்குமப்பூ மற்றும் பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குகிறது. மாசுமறுக்களை குறைக்கவும் உதவுகிறது.

அழகான தெளிவான முகத்தைப் பெறவே எல்லா பெண்களும் ஆசைப்படுகிறார்கள். முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளால் பெண்களின் தன்னம்பிக்கை குறைவதோடு, மனதை ஒருமுகப்படுத்த முடியாமலும் போகிறது. மாசற்ற தெளிவான முக அழகிற்காகப் பெண்கள் பல வகையான கிரீம்கள், ஃபேஸ் பேக்குகள், ஸ்கின் டோனர்களை பயன்படுத்துகிறார்கள். பல சமயங்களில், பெண்கள் முகத்தின் அழகை மேம்படுத்தப் பல லட்சங்களைச் செலவழித்து அழகு சிகிச்சைகள் கூடச் செய்து கொள்கிறார்கள்.

விலையுயர்ந்த அழகு சிகிச்சையின் பலன்கள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். ஆனால் 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு, சரும நிறம் மீண்டும் மங்கிவிடும். அதிக பணம் செலவழித்து அழகு சாதன பொருட்கள் மற்றும் அழகு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு முன் சில இயற்கையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள். இயற்கையான வீட்டு வைத்தியங்கள் பக்க விளைவுகள் அற்றது. இது உங்கள் சருமத்திற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இனி உங்கள் சருமத்திற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம். இந்தக் கிரீமை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தலாம். நைட் கிரீம் தயாரித்து பயன்படுத்தும் முறையைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வீட்டில் நைட் கிரீம் செய்வது எப்படி?

இதைச் செய்வதற்கு உங்கள் சமையலறையில் இருக்கும் பாதாம் மற்றும் குங்குமப்பூ தேவைப்படும்.

தேவையான பொருட்கள்

  • பாதாம் - 7 அல்லது 8
  • கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
  • குங்குமப்பூ இழைகள் - 4 முதல் 5 வரை
  • பாதாம் எண்ணெய் - 1 முதல் 2 டீஸ்பூன்
  • செய்முறை

    • முதலில் பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
      • காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
        • ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் இயற்கையான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.
          • இந்தக் கிரீம் தயாரிக்க, இயற்கையான கற்றாழை ஜெல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
            • கடைகளில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.
              • கற்றாழை ஜெல்லில், அரைத்த பாதாம் விழுதை நன்கு கலக்கவும்.
                • இந்தக் கலவையில் குங்குமப்பூ இதழ்கள் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.
                  • இந்தக் கலவையை மென்மையான கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
                    • பாதாம் மற்றும் குங்குமப்பூவால் ஆன உங்கள் நைட் கிரீம் தயார்.
                      • இதைக் காற்று புகாத பாட்டிலுக்கு மாற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
                        • இந்த க்ரீமை ஒருமுறை தயாரித்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.
                        • நைட் கிரீமை பயன்படுத்துவது எப்படி?

                          • பாதாம் மற்றும் குங்குமப்பூ கிரீமை பயன்படுத்துவதற்கு முன், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள்.
                            • முகத்தைச் சுத்தம் செய்தபிறகு, சருமத்தில் டோனரை தடவவும்.
                              • முகத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை காய விட்டு, பின்னர் தயார் செய்த கிரீமை சருமத்தில் தடவுங்கள்.
                                • பாதாம் மற்றும் குங்குமப்பூ கிரீம் கொண்டு முகத்தை 1 முதல் 2 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.
                                  • இந்த க்ரீமை முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம். முகத்தைக் கழுவ வேண்டிய அவசியம் இல்லை.
                                    • இந்தக் கிரீமை தினமும் பயன்படுத்தி உங்கள் முகத்தில் ஏற்படும் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம்.
                                    • பாதாமின் சத்துக்கள்

                                      பாதாம் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது நார்ச்சத்து, புரதம், வைட்டமின் E, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் பலவற்றின் சிறந்த மூலமாகும். உடல் எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதி அபாயத்தைக் குறைக்கவும் இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.

                                      குங்குமப்பூ சத்துக்கள்

                                      குங்குமப்பூவில் ஆன்டி -ஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்-C, பொட்டாசியம், வைட்டமின் A, இரும்புச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன.

                                      images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்