இந்த எல்லாவித பிரச்சனைக்கும் ஒரே தீர்வு வெண்பூசணி தான்

By Balakarthik Balasubramaniyan
25 Sep 2023

வெண்பூசணி

அன்றாட வாழ்வில் வெண்பூசணியைச் சேர்த்துக் கொள்வது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது

ஊட்டச்சத்துக்கள்

வெண்பூசணியில் வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், புரதம், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன

ஆற்றலைத் தர

தினமும் வெண்பூசணி சாறு குடித்து வர அறிவாற்றல் மேம்படும். மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும்

சிறுநீரகப் பிரச்சனைக்கு

சிறுநீரகக் கற்களை நீக்க, வெண்பூசணி விதைகள் எடுத்து தோல் நீக்கி, அதை மோர் சேர்த்து அரைத்து குடித்து வர வேண்டும்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு

வெண்பூசணி சாறு உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. குறிப்பாக மூலம், பைல்ஸ், மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்க வெண்பூசணி சாறு உதவுகிறது

சுவாசப் பயன்பாட்டிற்கு

இது உடலில் அதிகப்படியான சளி அல்லது சளி சுரப்புகளை உடனடியாக தளர்த்தி, சுவாசக்குழாயிலிருந்து அதனை அகற்ற உதவுகிறது

இதய செயல்பாட்டிற்கு

வெள்ளைப்பூசணியை உட்கொள்வதன் மூலம் இதய செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

தைராய்டு பிரச்சனைக்கு

வெண்பூசணியில் அயோடின் உள்ளடக்கம் ஏராளமாக உள்ளது. இது உயர் தைராய்டு ஹார்மோன் அளவைக் குறைக்க உதவுகிறது

மூட்டு நோய்களுக்கு

வெண்பூசணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் எலும்பை வலுவாக்க உதவுகிறது. மேலும் மூட்டு நோய் பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது