வயதானவர்கள் மற்றும் முதுக்குப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கீழ் முதுகு வலி வருவது இயல்பானது. இந்த வலி அன்றாட நடவடிக்கையில் இருந்து விலக்கி வைக்கும். கீழ் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இது எலும்பு தொடர்பான பிரச்னைகளையும் நோய்களையும் ஏற்படுத்தும். இதற்கு சிறந்த வைத்தியமாக ஆயுர்வேதம் திகழ்கிறது. இதற்கான சில ஆயுர்வேத வைத்தியங்களைப் பற்றிப் பார்ப்போம்.
கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம்?
கீழ் முதுகில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது குறித்து டேராடூனில் உள்ள ஸ்ரீ குந்த் மருத்துவ கிளினிக்கின் ஆலோசகரும் மருத்துவரான ஆயுர்வேத நிபுணர் அனுஷா கோயல் எங்களிடம் பகிர்ந்தார். அதில், “பொதுவான வாழ்க்கை முறை பிரச்சனைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது தவறான தோரணையில் வேலை செய்வது போன்றவை முதுகு வலிக்கு காரணம். மேலும் எலும்பு நிலைகள், பலவீனமான தசைகள் மற்றும் சுளுக்கு போன்றவற்றாலும் கீழ் முதுகு வலி ஏற்படலாம்” என்றார்.
ஆயுர்வேதம் பெரும்பாலான நிலைமைகள் மற்றும் வலிகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கை மருத்துவமாக திகழ்கிறது. இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதற்கு சான்றாக கீழ் முதுகுவலிக்கு ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துபவர்கள் சாதகமாக பதிலளித்துள்ளனர். எனவே கீழ் முதுகுவலியைக் குறைக்க பயனுள்ள சில ஆயுர்வேத வைத்தியங்கள் குறித்து அறிவோம்.
கீழ் முதுகு வலியை குறைக்க ஆயுர்வேத வைத்தியம்
1. சிவப்பு மிளகாய்:
பல உணவுகளில் கூடுதல் டாப்பிங்காக சிவப்பு மிளகாயை பயன்படுத்திருக்கலாம். ஆனால் இவை முதுகுவலி அல்லது தசைகளில் ஏற்படும் எந்த வகையான வீக்கத்தையும் போக்க பயன்படுத்துகிறது. இது தசை திசுக்களில் வலியைக் குறைக்கும்.
இது ஒரு சிறந்த வலி நிவாரணி கலவை ஆகும். இது நரம்பு மண்டலத்தை காத்து, பிரச்னையை கட்டுபடுத்துகிறது. சிவப்பு மிளகாய் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும், இது உடலின் உள்ளேயும் வெளியேயும் பல பகுதிகளில் வலியைக் குறைக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இந்த ஆயுர்வேத மூலிகையை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது ஒழுங்கற்ற குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.
2. இஞ்சி:

மற்றொரு சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி சிறந்து விளங்குகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலெற்சி எதிர்ப்பு கலவைகள் உடலில் எந்த விதமான வலியையும் குறைக்கும். மேலும் தசை திசுக்களை சிறப்பாகச் செயல்படச் செய்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். முதுகு வலி மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த, இஞ்சி சிறந்த ஆயுர்வேத தீர்வாக இருக்கிறது. இஞ்சியின் பக்கவிளைவுகள் மிகக் குறைவு என்பதால் வலியைப் போக்க பல்வேறு உணவுகளில் இதைப் பயன்படுத்தலாம். இஞ்சியை தேநீருடன் சேர்த்து குடிக்கலாம்.
3. ஃபீவர்ஃபியூ:
இந்த ஆயுர்வேத தீர்வு மற்றும் மூலிகை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இது உண்மையில் வலி மேலாண்மை மருந்துகளில் ஒரு சிறந்த கலவையாக பயன்படுத்தப்படுகிறது. ஒற்றைத்தலைவலி, தலைவலி, வயிற்று வலி மற்றும் பல்வலி ஆகியவற்றின் பாதிப்பைக் குறைப்பதில் ஃபீவர்ஃபியூ சிறந்து திகழ்கிறது. இந்த ஆயுர்வேத மூலிகை உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்படலாம். வெவ்வேறு வயதினருக்கு மருந்தின் அளவு மாறுபடும். இதை பால், தேநீர் மற்றும் மூலிகை கலவையாக சேர்த்து சாப்பிடலாம். ஃபீவர்ஃபியூவை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்தில் சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
4. மஞ்சள்:
உடலில் வீக்கம் மற்றும் வலியுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க நீண்ட காலமாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. பல பிரச்னைகளுக்கு சிறந்த இயற்கை மருத்துவமான மஞ்சள் திகழ்கிறது. மஞ்சள் ஒரு மசாலா பொருள் ஆகும். இது மூட்டுவலி மற்றும் நெஞ்செரிச்சல் வலியைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் தசைகளின் வீக்கம் தொடர்பான பிரச்னைகளை தடுக்கிறது.
5. டெவில்ஸ் கிளா:
முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க உலகின் பல பகுதிகளில் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. டெவில்ஸ் கிளா ஒரு வலிமையான மூலிகையாகும். அதன் சிகிச்சை விளைவுகளை அதிகரிக்க குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பித்தப்பை கல் அல்லது குடல் புண் உள்ளவர்கள் இந்த மூலிகையை தவிர்க்க வேண்டும்.
6. ஓமம் விதை:

ஓமம் விதை ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும் செரிமான ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், தசை இழுத்தல் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் கீழ் முதுகு வலியைக் குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவு அல்லது மூலிகை பானத்தின் ஒரு பகுதியாக இதை நீங்கள் உட்கொண்டால், கீழ் முதுகுவலியை தடுத்து அதை மீண்டும் வருவதைத் தடுக்கிறது. இந்த ஆயுர்வேத மசாலா உங்கள் வலியைக் குறைப்பதற்கும் உங்கள் உடலுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image Source: Freepik