ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் ராகி - இதை எந்த மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்?

  • SHARE
  • FOLLOW
ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் ராகி - இதை எந்த மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்?

பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ராகி, குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ராகியில் இருக்கும் புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் மாச்சத்து உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன. ஆறு மாதங்கள் நிறைவடைந்த குழந்தைகளுக்கு ராகி கொடுக்கலாம்.இருப்பினும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் வேறுபடும் என்ற காரணத்தினால் உங்கள் குழந்தைக்கு ராகி தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை ஒருமுறை ஆலோசனை செய்யுங்கள். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ராகி நன்மை அளிக்கிறது.ராகியை குழந்தைகளுக்கு ஊட்டுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

benefits-of-feeding-ragi-for-babies

எலும்புகளை வலுப்படுத்தும்

ராகி எலும்புகளை வலுவாக்கும். குழந்தைகளுக்கு ராகியைக் கொடுப்பதன் மூலம், அவர்களின் எலும்புகள் வலுவடைகிறது.மேலும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீராக நடைபெறுகிறது. ராகியில் நிறைந்துள்ள வைட்டமின் D எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ராகி எலும்பு முறிவு அபாயத்தையும் குறைக்கிறது. குழந்தைகளின் உடலுக்குத் தேவையான கால்சியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ராகியை தொடர்ந்து கொடுக்கலாம்.

ராகியை கஞ்சி செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்ற இனிப்புகள் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இரத்த சோகையை நீக்க உதவும்

ராகயில் உள்ள இரும்புச்சத்து குழந்தையின் உடலில் உள்ள ரத்தப் பற்றாக்குறையை போக்குகிறது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் C,  உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ராகியை குழந்தைகளுக்குக் கொடுப்பதால், குழந்தைகளின் வயிறு  நிரம்பி இருக்கும்.

ராகி எளிதில் ஜீரணமாகும்

ராகி எளிதில் ஜீரணமாகும், எனவே இதை உட்கொள்ளும் குழந்தைகளின் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, குழந்தையின் வயிறை நிரம்ப செய்யும். ராகியை குழந்தைகளுக்குக் காலை அல்லது மதிய வேளைகளில்  கொடுக்கலாம்.ராகி சாப்பிடுவதால், குழந்தையின் வயிறு சீராக இருக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.

புரதம்

குழந்தைகளின் சிறந்த உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. ராகியை குழந்தைகளுக்கு ஊட்டுவதால், உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகளளுக்கு ராகியைக் கொடுப்பது, நோய்வாய்ப்படுவதைக் குறைத்து, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தப்படுகிறது. ராகி சாப்பிடுவதால் குழந்தைகளின் தசைகள் வலுவடையும்

எடை அதிகரிக்க உதவும்

குழந்தைகளுக்கு ராகியை ஊட்டுவது, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் D, வைட்டமின் B1 போன்ற சத்துக்கள் ராகியில் உள்ளன. இவை அனைத்தும் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுகின்றன. குழந்தைக்கு ராகியை ஊட்டுவது அவர்களின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது.

ராகி கஞ்சி செய்முறை:

  • ஒரு சிறிய மேஜை கரண்டி அளவு ராகியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • காலையில் ஊற வைத்த ராகியை, அரைத்துப் பால் எடுக்கவும்.
  • இந்தப் பாலை கஞ்சி பதம் வரும் வரை காய்ச்சி ஆறிய பின் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
  • இதில் சில துளிகள் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும்.
  • ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்குக் கொடுக்கும்பொழுது இதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்க வேண்டாம்.
  • எட்டு மாதம் நிறைவடைந்த பிறகு இதில் ஊற வைத்து அரைத்த பேரிச்சம் பழம் அல்லது  உலர் பருப்புகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
  • குளுத்தன்(gluten) இல்லாத உணவுப் பொருளாக இருப்பதால், கோதுமைக்கு ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ராகியை கொடுக்கலாம். முதல் முறை குழந்தைக்கு ராகி கொடுக்கும்பொழுது மிகச் சிறிய அளவிலேயே தொடங்க வேண்டும்.குழந்தைகளுக்கு ராகி கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

    Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்