Benefits Of Bathing With Guava Leaves: சில இயற்கை தாவர வகைகள் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தருவதுடன், சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அந்த வகையில், கொய்யா இலைகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றன. மேலும், இவை சருமப் பராமரிப்பிற்கும், கூந்தலுக்கும் மிகவும் நன்மை தருகின்றன.
கொய்யா இலை நீர் குளியல்
கொய்யா இலை நீர் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த நன்மை அளிக்கிறது. கூடுதலாக, இவை சருமம் மற்றும் கூந்தலுக்கு உதவகக்கூடியதாகும். சருமம் மற்றும் கூந்தலுக்கு உதவும் கொய்யா இலை நீரை தனித்தனியே பயன்படுத்துவதற்கு பதில், குளிக்கும் போது ஒன்றான பயன்களைப் பெறலாம். மேலும், இது முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ள வழியாகும். கொய்யா இலை குளியலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி அவர்கள் விளக்கியுள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
கொய்யா இலைகள் எப்படி சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை தருகிறது
பொதுவாக கொய்யா இலைகளில் வைட்டமின் சி, புரதம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவை சருமம் மற்றும் முடிக்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. மேலும், கொய்யா இலைகள் ஆக்ஸிஜனேற்றங்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, ஆயுர்வேதத்தில் கொய்யா இலைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இவை சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை நீக்குவதுடன், பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

கொய்யா இலை குளியல் பயன்கள்
கொய்யா இலையில் குளிப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.
சரும மேம்பாட்டிற்கு
கொய்யா இலை நீரில் குளிப்பதன் மூலம், பருக்கள், ஒவ்வாமை, தழும்புகள் சொறி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும், இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, இயற்கைப் பொலிவைத் தருகிறது.
மிருதுவான சருமத்திற்கு
கொய்யா இலை நீர், வறண்ட சரும பிரச்சனையை நீக்கி, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை வழங்குகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை தடுக்கவும், ஒவ்வாமைகளை நீக்கவும் உதவுகிறது. இது மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது.
இளமையாக வைத்திருக்க
சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், துளைகளை நீக்க கொய்யா இலை நீர் உதவுகிறது. இது இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Best Nail Care Tips: நகம் அழகாக மற்றும் பாதுகாப்பாக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோப் பண்ணுங்க..
முடி வளர்ச்சிக்கு
கொய்யா இலையை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம், பிளவு முடிகள், உதிர்ந்த மற்றும் உலர்ந்த முடிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. விரைவான முடி வளர்ச்சிக்கும், புதிய முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதன் மூலம் முன் கூட்டியே நரை முடியைத் தடுக்கவும் கொய்யா இலை குளியல் உதவுகின்றன.
பொடுகுத் தொல்லை நீங்க
முடி உதிர்தல், மெல்லிய முடி போன்ற பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு பொடுகு முக்கிய காரணமாக அமைகிறது. பொடுகில் இருந்து விடுபட இந்த கொய்யா இலை நீர் உதவுகிறது. இது தவிர, உச்சந்தலையில் ஏற்படும் ஒவ்வாமை, சொரியாசிஸ் போன்றவற்றை நீக்க உதவுகிறது. இதற்கு கொய்யா இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளே காரணம் ஆகும்.

கொய்யா இலையில் எப்படி குளிப்பது?
கொய்யா இலையில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்திருப்பினும், எப்படி குளிப்பது என்ற சந்தேகம் பெரும்பாலானோர்க்கு எழும். கொய்யா இலையில் குளிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
பாத்திரம் அல்லது வாளியில் தண்ணீர் ஊற்றி 20 முதல் 25 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் கொதித்ததும், சிறிது ஆற விட வேண்டும். முதலில் சோப்பு அல்லது வெற்று நீரில் சருமத்தை சுத்தம் செய்து பிறகு கொய்யா இலைத் தண்ணீரில் குளிக்க வேண்டும். அதன் பிறகு, தோலை நன்கு உலர வைக்கலாம். இது சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை நீக்கி பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Women Beauty tips: மேக்கப் போடாமல் இயற்கையாக நீங்க அழகாக இருக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik