Vitamin D Foods List: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டியும் ஒன்றாகும். வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை நேரடியாக சூரிய ஒளியின் வழியாகப் பெறலாம். இது தவிர, வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவு வழியாகப் பெறலாம். வைட்டமின் டி சத்துக்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களாகும். இந்த வைட்டமின் டி சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காத போது பல்வேறு உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே உடல் நல ஆரோக்கியத்திற்கு சில வைட்டமின் டி உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில வைட்டமின் டி நிறைந்த உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்களில் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக 250 மிலி ஆரஞ்சு பழச்சாற்றில் 2.5 எம்.சி.ஜி அளவிலான வைட்டமின் டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: காளான்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே…
காளான்
வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் காளான் முக்கியமான உணவாகும். மனிதர்களைப் போல, காளானும் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்கிறது. மேலும், காளான் வைட்டமின் டி3 ஐ விட வைட்டமின் டி2 வை அதிகளவு உற்பத்தி செய்கிறது.
தானிய வகைகள்
பல்வேறு தானியங்கள் வைட்டமின் டி சத்துக்களுடன் காணப்படுகின்றன. எனினும் தானியங்களில் வைட்டமின் டி அளவை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும், தானியங்களில் பொதுவாக இரும்பு, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.
முட்டை
முட்டையில் வைட்டமின் டி அளவானது 1 எம்.சி.ஜி அளவில் இருக்கும். எனினும் கோழிகள் பெறக்கூடிய சூரிய ஒளி மற்றும் உணவைப் பொறுத்து முட்டையில் உள்ள வைட்டமின் டி சத்துக்களின் அளவு மாறுபடலாம். குறிப்பாக பண்ணை முட்டையை விட வெளியில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து குறைபாடு: தெரிந்து கொள்ள வேண்டியவை இது தான்...
மத்தி
மத்தி மீன்கள் வைட்டமின் டி நிறைந்த உணவு வகைகளில் ஒன்றாகும். மேலும் இதில் புரதம், வைட்டமின் டி, கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. எனவே மத்தி மீனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறலாம்.
சால்மன்
அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மீன்களில் சால்மன் மீனும் ஒன்று. ஒவ்வொரு 100 கிராம் சால்மன் மீனில் 10.9 எம்.சி.ஜி அளவிலான வைட்டமின் டி உள்ளது. இது உடலில் இதயம், மூளை, மற்றும் தைராய்டு போன்றவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
Image Source: Freepik