Brain Tumor Causes, Symptoms & Treatment: மூளைக்கட்டி என்பது மூளையின் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிப்பதாகும். இந்த மூளைக்கட்டிகளில் புற்றுநோய் கட்டிகளும் அடங்கும். இருப்பினும், அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் இல்லை. இதில் பெரும்பாலானவை சாதாரண கட்டிகளாகும். மூளைக்கட்டி பற்றி அனைத்து விவரங்களையும், மும்பையில் உள்ள எச்.சி.ஜி கேன்சர் சென்டரின் மூத்த ஆலோசகர், ரேடியேஷன் ஆன்காலஜி டாக்டர் உபாஸ்னா சக்சேனா அவர்கள் விளக்கியுள்ளார்.
மூளைக்கட்டி வகைகள்
மூளைக்கட்டி தீங்கற்றதாகவோ அல்லது வீரியம் மிக்கதாகவோ இருக்கலாம். இது கட்டியின் வகை, அளவு மற்றும் அதன் இருப்பிடத்தைப் பொறுத்து அமைகிறது. இது கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுப்பாக உள்ளது. கட்டியின் வகையைப் பொறுத்து, நோயாளிக்கு அடுத்தடுத்த சிகிச்சைகள் அமைகின்றன. கீமோதெரபியுடன் அல்லது கீமோதெரபி இல்லாமல் கதிர்வீச்சு சிகிச்சையானது கட்டியின் வகை மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு எம்ஆர்ஐ அடிப்படையில் வழங்கப்படுகிறது. சிலருக்கு ரேடியோதெரபி முடிந்த பின் கீமோ தெரபி தொடர்பான படிப்புகள் தேவைப்படுகின்றன. டாக்டர் சக்சேனா கூற்றுப்படி, சில புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் கூடுதல் சிகிச்சை எதுவும் தேவைப்படாது எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
மூளைக்கட்டிக்கான ஆபத்து காரணிகள்
மூளைக்கட்டி ஏற்படுவதற்கு பல்வேறு ஆபத்து காரணிகள் உள்ளன. ரப்பர் அல்லது வினைல் குளோரைடு, எண்ணெய் பொருள்கள் போன்றவற்றின் வெளிப்பாடு, மூளைக்கட்டியைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். மேலும், இது பரம்பரை மரபியல் காரணிகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், குடும்ப வரலாறு காரணமாகவும் மூளைக்கட்டி ஏற்படலாம். ஆனால், இது 10%-ற்கும் குறைவான நிகழ்வுகளில் ஒன்றாகும் என மருத்துவர் சக்சேனா கூறினார்.
மேலும், இந்த மூளைக்கட்டி ஏற்படுவதற்கான வேறு சில ஆபத்து காரணிகளாக தலையில் காயம், ஒவ்வாமை, நோய்த்தொற்றுகள், வைரஸ்கள், அயனியாக்கும் கதிர்வீச்சுடன் மூளை அல்லது தலைக்கு முந்தைய சிகிச்சை, பிற வைரஸ் தொற்றுகள், ஒவ்வாமை, மற்றும் மின்காந்த கதிர்வீச்சு போன்றவையும் அடங்குகின்றன.
மூளைக்கட்டியின் அறிகுறிகள்
எல்சேவியர் இதழின் படி, பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் மூளைக்கட்டியினால் பாதிக்கப்படுவர். ஆனால், மெனிங்கியோமா போன்ற குறிப்பிட்ட வகை மூளைக்கட்டி பெண்களில் அதிகம் காணப்படுகிறது. மூளைக்கட்டிக்கான சில அறிகுறிகளைக் காணலாம்.
- விவரிக்க முடியாத வாந்தி மற்றும் குமட்டல்
- சமநிலை அடைவதில் சிரமம்
- மங்கலான பார்வை அல்லது இரட்டைப் பார்வை
- பேசுவதில் சிரமம்
- புதிய அல்லது மாற்றப்பட்ட தலைவலி
- வலிப்பு ஏற்படுதல்
- காது கேட்பதில் பிரச்சனைகள்
- ஒரு கை அல்லது காலில், இயக்கம் அல்லது உணர்வு
- டிப்படியாக இழப்பு
மூளைக்கட்டியின் இந்த அறிகுறிகள் கட்டி அமைந்துள்ள மூளையின் பகுதியைப் பொறுத்ததாகும். இது அழுத்தம் விளைவை ஏற்படுத்தும் அளவு மற்றும் வகையைப் பொறுத்தது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
மூளைக்கட்டியின் சிகிச்சை முறைகள்
பெரும்பாலும் மூளைக்கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையை, கதிரியக்க சிகிச்சை இல்லாமல், அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். இது அவர்கள் உயிர் வாழும் விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. டாக்டர் சக்சேனாவின் கூற்றுப்படி, நுண்ணிய நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் அறுவை கிச்சை வெற்றி விகிதம் கணிசமாக மேம்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையானது சிகிச்சையின் முதல் வரிசையில் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இதன் முதன்மை நோக்க முடிந்த வரை கட்டியை அகற்றுவதே ஆகும். இரண்டாவது நோக்கம், கட்டியின் வகையை வரையறுப்பதற்கு கட்டி திசுக்களை வைத்திருப்பது ஆகும்.
மூளைக்கட்டி சிகிச்சைக்குப் பின் வாழ்க்கைத் தரம்
மூளைக்கட்டியைப் பொறுத்த வரை, சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கைத் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில், மூளைக்கட்டி நோயாளிகள் இரண்டாம் நிலை அறிகுறிகளாக, ஆளுமை மாற்றங்கள், நரம்பியல் சிதைவு, அறிவாற்றல் குறைபாடு, பேசுவதில் சிரமம் (அஃபாசியா) அல்லது பார்வைக் குறைபாடுகள், நினைவகம் மற்றும் புத்திசாலித்தனத்தின் தாக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது.
மேலும், மிக முக்கிய பகுதியாக தற்காலிகமான அல்லது நிரந்தர முடி உதிர்தல், அறுவைசிகிச்சை வடு அல்லது குறைபாடு போன்றவற்றின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிகள் மற்றும் சிகிச்சையின் உடல் ரீதியான தாக்கத்தை சமாளிக்க ஆலோசனை மிக முக்கியமானதாகும். நோயாளிகளுடன் தரமான நேரத்தைச் செலவழித்து அவர்களுக்கு ஆதரவை அளித்து, மறுவாழ்வு மூலம் உதவ பராமரிப்பாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Sleep Talking: தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? காரணம், சிகிச்சை குறித்து நிபுணர்கள்
Image Source: Freepik