Effects of Sleep Deprivation on The Brain: ஆரோக்கியமாக இருக்க, உடலுக்கு போதுமான அளவு ஓய்வு (தூக்கம்) மிகவும் முக்கியம். குறைவான தூக்கம் பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதுடன், உடல் பருமன் மற்றும் சரும சுருக்கங்களை ஏற்படுத்தும். Proteome Research of American Chemical Society இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குறைவான தூக்கம் அல்லது இரவு முழுவதும் விழித்திருப்பவர்களின் மூளை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Brain Tumor Symptoms: மூளைக்கட்டி வகைகள், அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள்
மூளை நரம்புகள் பலவீனமாகலாம்

நீண்ட நேரம் விழித்திருப்பது அல்லது தூக்கமின்மை மூளையின் நரம்புகளை பலவீனமடையச் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால், மூளை வெகுவாக பாதிக்கப்படலாம். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, Pleiotrophin என்ற உறுப்பு மூளையில் காணப்படுகிறது, இது தூக்கமின்மை காரணமாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நினைவாற்றலைக் கட்டுப்படுத்தும் ஹிப்போகேம்பஸின் நரம்புகள் பலவீனமடையத் தொடங்கும். இதனால், எதிர்காலத்தில் நியாபக சக்தி குறைந்து மறதி ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம் : Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
குறைவான தூக்கத்தால் ஏற்படும் தீமைகள்

இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் மருத்துவர் டாக்டர் சீமா யாதவ், MD-யிடம் பேசினோம். அவர், தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றார். குறைவான தூக்கம் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
இதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்பின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி, தூக்கமின்மை நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்சனைகள், பக்கவாதம், புற்றுநோய் அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகளான சுருக்கங்கள், கரும் புள்ளிகள் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

- நல்ல தூக்கத்தைப் பெற, முதலில், உங்கள் அறையின் வெப்பநிலையை சரியாக வைத்து, அறையை சுத்தமாக வைத்திருங்கள்.
- நேரமின்மையால் பலர் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தூக்கத்திற்கான சரியான நேரத்தை தீர்மானிக்கவும்.
- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.
- இரவில் அதிக தண்ணீர் குடித்துவிட்டு தூங்க வேண்டாம். ஏனென்றால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு விழிக்க நேரிடும். இது தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
- தூங்குவதற்காக படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் மொபைலை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.
Pic Courtesy: Freepik