கவலையை எழுப்பும் இந்தக் குழந்தை பருவ உடல் பருமனை பற்றிய முழுமையான தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் குழந்தை பருவ உடல் பருமன் மற்றும் பெருவாரியாகப் பரவும் தொற்றுநோய்பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? தற்போது, இந்தியாவில் உள்ள பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை 14.4 மில்லியனாக உள்ளது, இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உடல் பருமனால் பல்வேறு நாட்பட்ட நோய்களுக்குக் குழந்தைகள் உள்ளாவது கவலையளிக்கிறது. பெற்றோர்கள் விழிப்புடன் தங்கள் குழந்தைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தால் உடல் பருமனை தடுக்கலாம். இந்தக் பதிவில் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் அதைத் தடுக்கும் முறைபற்றித் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை பருவ உடல் பருமனின் காரணங்கள்

பொதுவான சில காரணங்கள்:
மரபியல் - இந்தியர்கள் மரபணு ரீதியாக உடல் பருமனுக்கு முன்னோடியாக உள்ளனர். நெருங்கிய உறவுகளில் யாராவது பருமனாக இருந்தால், காலப்போக்கில் குழந்தையும் பருமனாக மாறக்கூடும்.
உணவு மாற்றங்கள் - குழந்தைகள் நவீன கால உணவுகள், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். இதனால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது.
உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறை - இன்றைய குழந்தைகள் வீட்டில் இருந்தப்படியே வீடியோ கேம்களில் விளையாடவும், கைபேசி மற்றும் டேப்லெட்டுகளைப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் வெளியில் ஓடியாடி விளையாடுவதில்லை, அதனால உடல் உழைப்பின்றி சோம்பேறிகளாகவும் மாறிவிட்டனர்.
தீவிர உடல் நல தாக்கங்கள்:
நாள்பட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்கு உடல் பருமன் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். டைப் 2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, மூட்டுவலி, சுவாசப் பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மூன்றில் இரண்டு குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உடல் பருமனாக இருப்பார்கள், அதனால்தான் இந்தியா சர்க்கரை நோயிற்கு உலகின் தலைநகராக மாறியுள்ளது.
குழந்தை பருவ உடல் பருமனை எவ்வாறு தடுப்பது?

குழந்தை பருவ உடல் பருமன் பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறுவதாக உலக சுகாதார அமைப்பு(WHO) எச்சரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பைதைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் உடல் பருமனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதைச் செய்வதற்கான சில வழிகள் பின்வருமாறு
- நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவைக் கொடுப்பதால் குழந்தைகள் நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.
- ஒரே வேளையில் முழு உணவையும் சாப்பிடுவதற்கு பதிலாக, உணவைப் பிரித்துச் சிறு பகுதிகளாக இடைவெளிகள் விட்டு அவ்வப்போது சாப்பிடக் கொடுக்கலாம். இது அவர்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது.
- உங்கள் குழந்தை எவ்ளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். அந்த அளவுக்கு மேல் கூடுதலாகச் சாப்பிடாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த அளவுகளைக் கடைபிடிக்க பிரிவுகளைக் கொண்ட தட்டுகளைப் பயன்படுத்த முயற்சிசெய்யலாம்.உணவில் கட்டுப்பாடு விதிப்பது அவரவர் நன்மைக்கே, அதனால் வருத்தப்பட வேண்டாம்.
- பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.இதைச் சாப்பிடுவதில் விருப்பம் இல்லாத குழந்தையாக இருந்தால், ஊட்டச்சத்து குறையாத வகையில் சூப்கள் மற்றும் பழச்சாறுகளை செய்து கொடுக்கலாம்.
- உணவைச் சமநிலைப்படுத்த அனைத்து உணவு வகைகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கவும்.
- மெதுவாகச் சாப்பிடுவதையும் அதிகமாகச் சாப்பிடுவதையும் தடுக்க டைனிங் டேபிளில் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள்.
- அவர்களின் திரை நேரத்தைக் குறைத்து, சாப்பிடும்போது டிவி பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதையோ கட்டுப்படுத்துங்கள்.
- சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.உங்கள் குழந்தைகளுக்குச் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள் கொடுப்பதை தவிர்க்கவும். இயற்கை சர்க்கரை உள்ள உணவுகள் உட்கொள்வதை ஊக்குவிப்பது நல்லது.
- அவர்களை உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தினமும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடல் பருமனைத் தடுக்க உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. மேலும், இது அவர்களைச் சரியான அளவுகளுடன் இணைக்கமுள்ளவராக மாற்றும்.
முடிவுரை
பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் உடல்எடை திடீரென அதிகரிப்பதைக் கண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் உணவு, உடல் செயல்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைக் கண்காணித்து எதில் பற்றாக்குறை உள்ளது என்பதை கண்டறியுங்கள்.உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சரியான எடையுடன் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. உணவு, தூக்கம் மற்றும் விளையாடுவதற்கு போதுமான நேரத்தை உள்ளடக்கிய ஒரு அட்டவணையைப் பின்பற்ற அவர்களை ஊக்குவிக்கவும். ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் புகுத்துவது வளரும்போதும் அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
Images Credit: freepik