Doctor Verified

common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

  • SHARE
  • FOLLOW
common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

மழைக்காலங்களில், பலவிதமான தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இரைப்பை குடல் அழற்சி, ஜலதோஷம், இருமல் முதல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல், மலேரியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற பல கடுமையான பாதிப்புகளும் அடங்கும். அவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான முறையில் நிர்வகிக்கப்படாவிட்டால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுகுறித்து ஐதராபாத் யசோதா மருத்துவமனையின் தொற்று நோய்கள் ஆலோசகர் டாக்டர் மோனாலிசா சாஹு கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

வெக்டரால் பரவும் நோய்கள்

வெக்டார் மூலம் பரவும் நோய்கள் பெரும்பாலும் கொசுக்களால் பருவமழையின் போது அதிக எண்ணிக்கையில் பரவுகிறது. பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரிக்கிறது. கொசுக்களால் பரவும் நோய்களுக்கு ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்துகள் அதிகம். மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா என பல ஆபத்தான நோய்கள் இதில் அடங்கும்.

மலேரியா

தி ஜர்னல் ஆஃப் க்ளைமேட் சேஞ்ச் அண்ட் ஹெல்த் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி , மலேரியா பரவல்கள் பருவகால மழையில் அதிகம் பரவுகின்றன, மழைக்கால மாதங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அதிகம் பரவுகிறது என்றாலும் பிற காலங்களிலும் இந்த பரவல் ஆங்காங்கே காணப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் சாஹூ கூறுகையில், "மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச காய்ச்சல், கடுமையான தலைவலி, மாற்றப்பட்ட சுயநினைவு, இருண்ட நிற சிறுநீர், கடுமையான இரத்த சோகை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இரத்தப்போக்கு" என பலவகை அறிகுறிகள் தென்படுகின்றன.

மலேரியாவை குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இருந்தாலும், குழந்தைகள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நிலைமை மோசமாகிறது.

டெங்கு

உலக சுகாதார அமைப்பின் ஆசிய நாடுகளின் அறிக்கையின்படி, மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு உச்சத்தில் இருக்கிறது. டெங்கு நோயாளிகள் காய்ச்சல், சொறி, மயால்ஜியா, ரெட்ரோ ஆர்பிட்டல் வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படுவதாக டாக்டர் சாஹூ கூறுகிறார்.

அவர்களில் சிலர் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாக அறியப்படும் கடுமையான டெங்குவால் கூட பாதிக்கப்படுகிறார்கள். இது பல இடங்களில் இருந்து இரத்தப்போக்கு, அடிவயிற்றில் கடுமையான வலி, கடுமையான தலைவலி மற்றும் மாற்றப்பட்ட உணர்திறன் என பலவகையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பல நேரங்களில், டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலை நிர்வகிப்பது சவாலானது, தீவிர கண்காணிப்பு மற்றும் முக்கியமான கவனிப்பு அவசியம். உடனடி மருத்துவ ஆலோசனை என்பது மிக முக்கியம்.

சிக்குன்குனியா


சிக்குன்குனியா என்பது மழைக்காலத்தில் பரவும் மற்றொரு பொதுவான நோயாகும். டாக்டர் சாஹு கூறுகையில், "கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் சொரி போன்ற உச்ச காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது." இந்த காய்ச்சல் அரிதான சமயங்களில் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

லெப்டோஸ்பிரோசிஸ்


"லெப்டோஸ்பிரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும், இது சேற்று மற்றும் அசுத்தமான மழைநீரில் ஓடும் எலியால் பரவும் ஒரு பாக்டீரியா தொற்றாகும்." டாக்டர் சாஹூ கூறுகையில், இந்த நோய் மஞ்சள் காமாலை, அடிவயிற்றில் வலி, உயர்தர காய்ச்சல் என பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ரியான நேரத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூளை, முதுகுத் தண்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவைகளை விரைவாக ஏற்படுத்துகிறது என்றார்.

மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

கொசுக்கள் உற்பத்தியாவதைத் தவிர்க்க நமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

கொசுக் கடியைத் தவிர்க்க முழுக் கை ஆடைகள், கொசு விரட்டிகள், கொசு வலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சுத்தமான மற்றும் சுகாதாரமான, மூடப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அல்லது RO நீரைப் பயன்படுத்துங்கள். தெருவோர உணவுகள் மற்றும் நீர் குடிப்பதை தவிர்க்கவும்.

உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் தவறாமல் கழுவுங்கள். சானிட்டைசரை பயன்படுத்துங்கள். உணவுக்கு முன் மற்றும் கழிப்பறையை பயன்படுத்திய பின் சுகாதார பழக்கங்களை பின்பற்றுங்கள்.

நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதை முடிந்தவரை தவிர்க்கவும் மற்றும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு காய்ச்சல் தடுப்பூசி போடவும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. நோய்த் தொற்று அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவை அணுகுங்கள்

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்