Diaper Hygiene: டயப்பர் சுகாதாரம் குறித்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தை பிறப்பதற்கு முன், ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான அனைத்து முக்கியமான விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் வளர்ப்புக்கு தேவையான தகவல்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம், குழந்தைகளைப் பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது உங்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு, குழந்தையைக் கவனித்து கொள்ளும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு வருகிறது. குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க, அவர்களைப் பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். இன்றைய காலகட்டத்தில், சிறு குழந்தைகளுக்கு டயப்பர்கள் அத்தியாவசியம் ஆகிவிட்டது. உங்கள் குழந்தைக்கு டயாப்பர் பயன்படுத்துவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல நிறுவனத்தின் டயப்பரை மட்டும் உபயோகிக்க வேண்டும், ஏனெனில் குழந்தைக்குப் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக டயப்பர்களின் அளவையும் கவனிக்க வேண்டும். டயப்பர் மிகத் தளர்வாக இருந்தால், குழந்தை ஈரத்தை உணரலாம், அதுவே மிகவும் இறுக்கமாக இருந்தால், குழந்தையின் சருமத்தில் தழும்புகள் ஏற்படலாம். டயப்பர் சுகாதாரம் குறித்த சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்பதிவில் படித்தறிந்து பயன் பெறுங்கள்.
புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டயப்பர் சுகாதார விதிகள்:
(image source - freepik.com)
குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதால் பல அசௌகரியங்களைத் தவிர்த்திடலாம். ஆனால் தவறான முறையில் டயப்பர் அணிவதால் டயப்பர் தழும்புகள், தொற்று உள்ளிட்ட பல கடுமையான பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது தொடர்பான சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
1. டயப்பர் தடிப்புகளைத் தவிர்க்க, டயப்பரின் ஈரப்பதத்தை அவ்வப்போது கவனிக்க வேண்டும். ஈரப்பத பிரச்சனையை அகற்ற, அதிக திரவ உறிஞ்சும் டயப்பர் வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
2. குழந்தையின் டயப்பரை சரியான இடைவெளிகளில் மாற்ற வேண்டும். ஈரமான டயப்பரில் குழந்தைகளை நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. டயப்பரில் இருக்கும் ஈரப்பதத்தால் குழந்தைக்குத் தொற்று மற்றும் தடிப்புகள் ஏற்படலாம். ஆகையால், டயப்பர் பயன்படுத்தும்போது இந்த விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள்.
3. குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதற்கு முன்னும், பின்னும் உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அசுத்தமான கைகளால் குழந்தைக்குப் பல தொற்றுகள் ஏற்படலாம். குழந்தைகளின் சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க, உங்கள் கைகளை நன்கு சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
4. டயப்பரிலிருக்கும் ஈரப்பதம் மற்றும் எரிச்சலால் தடிப்புகள் ஏற்படுகின்றன. தரமற்ற டயப்பர் அல்லது டயப்பரை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்குத் தடிப்புகள் வரலாம். இதற்கு, சுத்தமான பஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்தபின், டயப்பர் கிரீம் பயன்படுத்த வேண்டும். சில லேசான தடிப்புகள் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் கடுமையான தடிப்புகளால் சிவப்பு புள்ளிகள், தோளில் வெடிப்பு மற்றும் வலியும் ஏற்படும். இந்த சூழலில் மருத்துவரை அணுகி தேவையான கிரீம்களை வாங்கிக் கொள்ளுங்கள்.
5. குழந்தைகளுக்கு ஏற்ற சரியான டயப்பரை தேர்வு செய்ய வேண்டும். இப்போது, கடைகளில் பல வகையான டயப்பர்கள் கிடைக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் உங்கள் குழந்தைக்குப் பயனுள்ளதாக இருக்காது. உங்கள் குழந்தையின் வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ற டயப்பர்களை தேர்வு செய்யுங்கள். முதலில் சிறு எண்ணிக்கைகளில் இருக்கும் ட்ரையல் பேக்குகளை வாங்கி அதன் தரம், உறிஞ்சும் திறன் போன்ற விஷயங்களை சோதித்து, பிறகு அதிக எண்ணிக்கைகளுள்ள டயப்பர் பேக்குகளை வாங்குங்கள். ஈரத்தை நன்கு உறிஞ்சக்கூடிய டயப்பர்களைப் பயன்படுத்தி, பல பிரச்சனைகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.
(image source - freepik.com)
6. டயப்பரைப் பயன்படுத்திய பிறகு, அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான, தூய்மையான சூழலைக் பராமரிப்பதன் மூலம், பல வகையான தொற்றுநோய்களைத் தவிர்க்கலாம். ஆகையால் எப்போதும் டயப்பரைப் பயன்படுத்திய பிறகு, அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். டயப்பரை அப்புறப்படுத்தியபிறகு, உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
டயப்பர் சுகாதாரம் தொடர்பான இந்த விஷயங்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம், பல பிரச்சனைகளிலிருந்து குழந்தையைப் பாதுக்காக்க முடியும். குழந்தைகளுக்கு டயப்பர் போடும்போது இந்த விஷயங்களை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Images Credit: freepik