முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

உங்கள் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? எனில், அதற்கு முட்டையை இப்படி சாப்பிட்டு பயன் பெறுங்கள்.
  • SHARE
  • FOLLOW
முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

உடல் எடை குறைப்பதற்கான முட்டை உணவுமுறை: முட்டையில் நிறைந்திருக்கும் அதிக புரதச்சத்து, நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி: முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது.நல்ல ஆரோக்கியத்திற்காகத் தினமும் முட்டை சாப்பிடுங்கள். தசை வளர்ச்சிக்காக ஜிம்மிற்கு செல்பவராக இருந்தாலும் சரி, மக்களின் ஆரோக்கியமான காலை உணவிற்கான தேர்வாக இருந்தாலும் சரி முட்டை தான் அனைவரின் முதல் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும், முட்டையைச் சாப்பிட்டால் உடல் எடைஅதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஒரு சில முட்டையைச் சாப்பிடுவதில்லை.குறிப்பாக எடை குறைப்பவர்கள் முட்டையை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் பயப்பட தேவையில்லை, முட்டை சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

முட்டையில் அதிக புரதம், வைட்டமின் B12, பயோட்டின் போன்ற பல சத்துக்கள் உள்ளன, இவை எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி முட்டையில் வைட்டமின் A, B, B12, வைட்டமின் D, வைட்டமின் E போன்றவையும் நிறைந்துள்ளன. இது தவிர, இது ஃபோலேட், செலினியம் மற்றும் பல தாது உப்புகளின் நல்ல மூலமாகும். உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைக்க முட்டை உதவுகிறது. உங்கள் எடையைக் குறைக்க முட்டை எவ்வாறு உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முட்டை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி? - உடல் எடை குறைப்பதற்கான முட்டை உணவு முறை

நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை பகுதியை மட்டும் பிரித்துச் சாப்பிட கூடாது. ஒரு முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற நீங்கள் ஒரு முழு முட்டையைச் சாப்பிட வேண்டும்.இதைப் பற்றி உணவியல் நிபுணர் ஸ்ரேயா குப்தா கூறுகையில், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் வேக வைத்த முட்டையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் (வேகவைத்த முட்டைகளைச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கிறது). முட்டையில் அதிகமாக உள்ள புரதச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.

உடல் எடையைக் குறைக்க முட்டையை எப்படி சாப்பிட வேண்டும்?

கருப்பு பீன்ஸ் உடன் முட்டை சாப்பிடுங்கள்

உடல் எடை குறைப்பதற்கு கருப்பு பீன்ஸ் உடன் முட்டைகளை உட்கொள்ளலாம். கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. கூடுதலாக, முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும். இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது இரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்கிறது.மேலும் உடலில் இருக்கும் கூடுதலான கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

கருப்பு மிளகுடன் முட்டை சாப்பிடுங்கள்

உடல் எடையைக் குறைக்க, நீங்கள் முட்டையுடன் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிட வேண்டும். கருப்பு மிளகில் பைபரின் உள்ளது. இது கொழுப்பு உயிரணுக்கள் உருவாவதை தடுக்கிறது. வேகவைத்த முட்டையுடன் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிடுவது உடல் எடை விரைவாகக் குறைப்பதற்கு உதவுகிறது.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முட்டையை எப்போது சாப்பிட வேண்டும்?

உடல் எடையைக் குறைக்க, வேகவைத்த முட்டையைக் காலை உணவாகச் சாப்பிட வேண்டும்.முட்டைகளை வேகவைக்கும்பொழுது தண்ணீர் சரியான வெப்பநிலையில் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்
ஒரு முட்டையைச் சரியாக வேகவைக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். இதற்கு மேல், முட்டையை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முட்டையை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டையைப் பொரியல், ஆம்லெட், அல்லது அரைவேக்காடான நிலையில் சாப்பிடக் கூடாது. மேலும் இவற்றைச் சமைக்கும்போது பயன்படுத்தக்கூடிய எண்ணெய் அல்லது வெண்ணெயாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம்.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்