Doctor Verified

AC cause bone pain: நீண்ட நேரம் ACயில் இருந்தால் எலும்பு வலி வருமா? மருத்துவர்கள் பதில்

  • SHARE
  • FOLLOW
AC cause bone pain: நீண்ட நேரம் ACயில் இருந்தால் எலும்பு வலி வருமா? மருத்துவர்கள் பதில்

சமீபகாலமாக வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது என்றாலும் முன்னதாக இருந்த கடுமையான வெயில் தாக்கத்தால் ஏசி பழக்கம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. பெரும்பாலான வீடுகளில் ஏசி இருக்கிறது. குறைந்தபட்சம் தூங்குவதற்கு முன் சிறிது நேரத்திற்காவது ஏசியை பயன்படுத்தும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. அதேபோல் பெரும்பாலான அலுவலங்களில் நாள் முழுவதும் ஏசி இயக்கப்படுவது உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழும்.

WebMD இணையதளத்தின்படி , ஏசி இயக்கம் இருந்தாலும் வெளிப்புற காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசித்தால் 'சிக் பில்டிங் சிண்ட்ரோம்' ஏற்படும். இதன் அறிகுறி என்று பார்க்கையில், தலைவலி, வாந்தி, சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகளை வைத்து பார்க்கும் போது, நீண்ட நேரம் ஏசியில் இருப்பதனால் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுமா என்பது குறித்து டாக்டர் ரோஹித் லம்பா, எச்ஓடி & மூத்த ஆலோசகர் (சுனார் இன்டர்நேஷனல் மருத்துவமனை) கூறியதை பார்க்கலாம்.

ஏசியில் வாழ்வது எலும்புகளை பாதிக்குமா?

சமீப ஆண்டுகளில், பெரும்பாலான இளைஞர்கள் MNC நிறுவனங்களில் வேலை செய்வதையும், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதையும் நாம் பார்க்கிறோம். ஒரு நபருக்கு ​​சூரிய ஒளி என்பது மிக அவசியம். ஏசி கார், ஏசி ஆஃபிஸ், வீட்டில் ஏசி என வாழும் போது சூரிய ஒளி தொடர்பு குறைகிறது. இதன்விளைவாக மூட்டுகள், இடுப்பு மற்றும் முதுகெலும்பு வலிக்க ஆரம்பிக்கும். மறுபுறம், ஒருவர் அதிக நேரம் ஏசியில் செலவழித்தால், அவரது எலும்புகளில் வலி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஒருவருக்கு மூட்டுவலி இருந்தால், அவரது உடல்நிலை மோசமடையக்கூடும். ஏசியில் அமர்வதால் மூட்டு மற்றும் தசைகளில் வலி அதிகரித்து, எலும்பு நோய் போல் தோன்றும். சரியான நேரத்தில் சிகிச்சை செய்யப்படாவிட்டால் அல்லது முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சாதாரண மூட்டு வலி கீல்வாதமாக மாறும்.

ஏசியால் ஏற்படும் எலும்பு வலியிலிருந்து விடுபடுவது எப்படி

உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஏசி நீண்ட நேரம் இயங்கினால், ஏசியின் வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸுக்கு மேலே உயர்த்தவும். நிபுணர்கள் 25 முதல் 27 டிகிரி வைப்பது என்பது சரியான முடிவு என கூறுகிறார்கள். இந்த வெப்பநிலையை ஏசியால் வைத்தால் எலும்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏசியில் அதிக நேரம் தங்குவதைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது ஏசி அறையை விட்டு வெளியே செல்லுங்கள். சூரிய ஒளியில் நடந்துக் கொடுங்கள். சாதாரண வெப்பநிலைக்கு உடலை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள். இதன் மூலம், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஏசியின் பிற பக்க விளைவுகள்

உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது: பொதுவாக ஏசி அறையின் அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். அறை குளிர்ச்சியாகிறது, ஆனால் தோல் மற்றும் கண்களின் ஈரப்பதமும் இழக்கப்படுகிறது. அதேபோல் ஒருநபருக்கு நீண்ட நேரம் தாகம் ஏற்படாது. இது உடலை நீரிழப்புக்கு வழிவகுக்கும். அடிக்கடி நடந்துக் கொடுப்பது, தண்ணீர் குடிப்பது அவசியம்.

சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்:

ஒரு நபர் நீண்ட நேரம் ஏசியில் நேரத்தை செலவிடும்போது, ​​அவருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் . குறிப்பாக, மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் தொற்றுகள் காணப்படும். சில நேரங்களில், ஏசி மூக்கடைப்புக்கும் காரணமாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த பிரச்சனை வைரஸ் தொற்றுநோயாக மாறும்.

தலைவலி ஏற்படலாம்:

நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடல் நீரிழப்பு ஏற்பட்டால் , உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி இருக்கலாம். குறிப்பாக, ஒருவர் மீண்டும் மீண்டும் ஏசி அறைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும்போது இது நிகழ்கிறது. அறையின் உள்ளே குளிர், அறைக்கு வெளியே வெப்பநிலை சாதாரணமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நபர் திடீரென குளிர்ந்த வெப்பநிலையிலிருந்து வெளியேறும்போது, ​​அவர் சூடாக உணர்கிறார். வெப்பம் மற்றும் குளிர் காரணமாக, திடீரென்று தலையில் கடுமையான வலி ஏற்படலாம் . எனவே, மிதமான வெப்பநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்