Reduce Stress: மன அழுத்தம், மனக் கவலை, மன சோர்வு என பலவகை பல மனநல பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. ஒருசிலருக்கு காலை எழுந்ததும் மனம் பதற்றமாக இருக்கும். அன்றைய நாள் முழுவதும் வேலையை முழுமையாக செய்ய முடியாது. பள்ளி செல்பவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை பெரும்பாலானோருக்கும் திங்கட்கிழமை காலை ஆனால் மனம் பதற்றத்துடன் காண முடியாது. இதுபோன்ற பல காரணங்களால் திடீரென மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. மன அழுத்த சூழ்நிலைகளை உங்களால் பல வழிகளில் கட்டுப்படுத்த முடியும் அதேபோல் மன அழுத்தத்தின் போது எப்படி நடந்துக் கொள்கிறீர்கள் என்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.
இதையும் படிங்க: வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கலா? அதனை சமாளிக்கும் 7 வழிகள் இங்கே
ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு
மன அழுத்தம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் அது ஒவ்வொரு நாளும் நடந்தால், அது நாள்பட்ட மன அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இப்படி நிகழாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மனதை ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடையும் போது அதில் இருந்து உங்கள் கவனத்தை திசைத் திருப்ப முயலுங்கள்.
மன அழுத்தம் குறைக்க பல்வேறு வழிகள்
மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற முறை உங்கள் நண்பனுக்கு பொருந்தாமல் போகலாம். உங்களுக்கான முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது மிக அவசியம். மன அழுத்தத்தை போக்குவதற்கான சில வழிகளை பார்க்கலாம்.
நடை பயிற்சி
நடப்பது மூளைக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என்பது நிதர்சனமான உண்மை. பூங்காவிலோ தோட்டத்திலோ நடப்பது இன்னும் பலன் தரும். இதன் காரணமாக உடல் தியான நிலைக்கு செல்கிறது. உங்கள் கவனத்தை திசை திருப்பவும் இது உதவும்.
மூச்சுப் பயிற்சி
அதிக மன அழுத்தத்தை உணரும்போது ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியே விடவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் மன அழுத்தத்தை உள்ளிருந்து விடுவிப்பது போல் உடல் தானாகவே ஓய்வெடுக்கும். மூச்சுப் பயிற்சி உடலுக்கும் பல நன்மை அளிக்கும். வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு நிமிடம் ரிலாக்ஸ் செய்து இந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
எண்ண ஓட்டத்தை திசை திருப்பவும்
நீங்கள் விரும்பும் இடத்தை கற்பனை செய்து, நீங்கள் அங்கு இருப்பதைப் போல உணருங்கள். சின்ன வயசுல கவலையே இல்லாம விளையாடிய பாட்டி, சிறு வயது விளையாட்டுகள், கோயில், வருங்கால விடுமுறை திட்டங்கள் போன்ற உங்களுக்கு பிடித்த விருப்பமானவையை கற்பனை செய்து பாருங்கள். அதை உணருங்கள். உங்கள் மனக் கவலையை திசைத் திருப்ப இது உதவும்.
பிடித்தமான உணவை உண்ணுங்கள்
மன அழுத்தத்தின் போது உங்களுக்கு பிடித்தமான உணவை உண்பதும் சிறந்த வழியாகும். பிடித்தமான உணவை சாப்பிடுங்கள். அது முடியாதபட்சத்தில் நட்ஸ், வேகவைத்த முட்டை, பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடுங்கள். இதுவும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். வீட்டில் இருந்தால் டிவி பார்த்துக் கொண்டும், அலுவலகத்தில் இருந்தால் கணினியை பார்த்துக் கொண்டும் சாப்பிடுங்கள். பிடித்த பாடலையோ காமெடி நிகழ்ச்சியை பாருங்கள். பிடித்த உணவு, பிடித்த நிகழ்ச்சி என இரண்டும் உட்கொள்ளும் போது உங்கள் மனதை திசை திருப்ப பெரிதளவு உதவும்.
கணினி, மொபைல், டிவி பார்க்கும் நேரத்தை குறைக்கவும்
நாம் பயன்படுத்தும் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நாம் எதிர்கொள்ளும் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. ஸ்கிரீன் டைம் குறைப்பது நல்லது, குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு. ஓய்வு நேரத்தை முழுமையாக அணுபவிக்கும். அந்த நேரத்தில் வாட்ஸ் அப் சேட், சமூகவலைதளம் உள்ளிட்டவையை பயன்படுத்த வேண்டாம்.
மியூசிக் கேளுங்கள்
அதிகரிக்கும் இதய துடிப்பை குறைக்கவும், பிபியை குறைக்கவும், மன அழுத்த ஹார்மோன் அளவை குறைக்கும் பிடித்த இசையை கேளுங்கள். இசைக்கு இந்த தன்மை உண்டு. நீங்கள் விரும்பும் எந்த இசையையும் கேட்கலாம், அது உங்களை அமைதியாக உணர வைக்கும். மன ஓட்டத்தை திசை திருப்ப உதவும்.
இதையும் படிங்க: உடலில் ஏற்படும் மன அழுத்தத்தின் 8 தாக்கங்கள்!
பிடித்த செயலை செய்யுங்கள்
இவை அனைத்தும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள். இது தவிர செடிகள், மெத்தைகள், புத்தகங்கள், சமையல், தோட்டக்கலை, நடனம், பொம்மைகள் செய்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற எந்த ஒரு செயலையும் செய்யலாம். சிறிய தூக்கம், பிடித்த புகைப்படங்களை பார்ப்பது, தியானம் செய்வது என எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவை அனைத்தும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
மன அழுதத்தில் இருந்து விடுபட இந்த வழிகள் உதவும் என்றாலும் தீவிர விளைவுகளை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகவது என்பதே சிறந்த முடிவாகும்.
image source: freepik