காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

  • SHARE
  • FOLLOW
காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

சமைத்த காய்கறிகளை விட சமைக்கப்படாத காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் படித்து பயன்பெறலாம்.

சமைக்கப்படாத காய்கறிகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்: இன்றைய வாழ்க்கை சூழலில், பெரும்பாலானவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணிக்காப்பத்தில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விஷயம். ஃபிட்னஸ் உணவு என்ற பெயரில், அரைவேக்காடாக சமைத்த காய்கறிகள் அல்லது சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுகிறார்கள். இந்த உணவு முறையில், காரமான உணவுகள், சிப்ஸ், துரித உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் போன்றவை தவிர்க்கப் படுகின்றன. இப்படி சமைக்கப்படாத காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, இந்த உணவு ஆரோக்கியமானது தானா என்று கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான ஸ்ரேயா அகர்வாலிடம் பேசினோம்.

சமைத்த காய்கறிகளைவிட சமைக்காத பச்சைக் காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சமைக்கப்படாத காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் கிடைக்கும். இதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் (Health Benefits of Eating Raw Vegetable)

1. இரத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

காய்கறிகளைச் சமைக்காமல் பச்சையாக உட்கொள்வது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சமைக்கப்படாத உணவுகளை உட்கொள்பவர்களின் இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு அளவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் நல்ல கொழுப்பின்(HDL) அளவும் சீராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்

உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு, இவ்விரண்டும் பல நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளாக இருக்கின்றன. சமைக்கப்படாத காய்கறிகள் எடை இழப்பு மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகின்றன. NCBI அறிக்கையின்படி, சமைக்கப்படாத காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் மற்றவர்களைவிட வேகமாக உடல் எடையைக் குறைக்கின்றனர். இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சிறந்த வளர்ச்சிதை மாற்றத்தைப் பெறலாம்.

3. சமைக்கப்படாத காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

சமைக்கப்படாத காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது சர்க்கரை நோய், புற்றுநோய், பார்கின்சன் நோய், கண்புரை போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

4. சமைக்கப்படாத காய்கறிகள் ஆற்றல் நிறைந்தவை

சமைக்கப்படாத காய்கறிகளை உட்கொள்வது உடலின் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உங்களுக்கு சீக்கிரம் பசி எடுக்காது. மேலும், ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.

5. சருமத்தை பளபளப்பாகவும், தெளிவாகவும் மாற்றுகிறது

சமைக்கப்படாத காய்கறிகளைச் சாப்பிடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அதிக நன்மை தரும். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் காணப்படுகின்றன. இது உங்கள் சரும அழகை மேம்படுத்தும். சமைக்கப்படாத பச்சை காய்கறிகளில் வைட்டமின் C காணப்படுகிறது, இது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும், களங்கமற்றதாகவும் மாற்றுகிறது.

எந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம்?

எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார் உணவு நிபுணர் ஸ்ரேயா அகர்வால் அவர்கள். சில காய்கறிகளை சமைக்காமல், பச்சையாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஒரு சில காய்கறிகளை மட்டுமே பச்சையாக சாப்பிட வேண்டும்.எந்தெந்த காய்கறிகளை சமைக்காமல், பச்சையாக சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்வோம்.

வெள்ளரி

வெள்ளரிக்காய் எல்லா சீசனிலும் எளிதாகக் கிடைக்கும். வெள்ளரியை சாலட், ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம். எப்போதும் வெள்ளரிக்காயை, இரவு அல்லது மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும். சமைக்கப்படாத காய்கறிகளை உணவிற்கு முன் சாப்பிடலாமே தவிர, கட்டாயமாக இதை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தக்காளி

தக்காளியையும் தயக்கமின்றி பச்சையாக உட்கொள்ளலாம். தக்காளி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இதில் அதிகளவு வைட்டமின் C இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கீரைகள்

குளிர்காலத்தில், நல்ல பசுமையான கீரைகள் கிடைக்கும். கீரைகள், வைட்டமின்-K, வைட்டமின் B-6, ரிபோஃப்ளேவின், ஃபோலிக், நியாசின், நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இதனுடன், கீரையில் போதுமான அளவுள்ள இரும்புச் சத்து, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

முள்ளங்கி

முள்ளங்கி செரிமான அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல், மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய், அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மேலும், பீட்ரூட், வெங்காயம், கேரட், டர்னிப், லெட்டியூஸ் போன்ற காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடலாம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்