கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா? 

  • SHARE
  • FOLLOW
கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா? 

கர்ப்ப காலத்தில், பெண்கள் உடல் மற்றும் மன ரீதியான பல மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் காலை சுகவீனம், சோர்வு, பலவீனம் போன்ற பொதுவான சில அறிகுறிகளை உணரலாம். சில பெண்களுக்கு, இந்த அறிகுறிகள் பிரசவம் வரை கூடத் தொடர்கிறது.கர்ப்ப காலம் முழுவதும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா? என்ற குழப்பம் நிலவுகிறது.நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது, தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு நன்மை தரும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது கர்ப்பத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க உதவுகிறது. இருப்பினும், கர்ப்பிணிகள் லேசான உடற்பயிற்சியை மட்டுமே செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் செய்யும்போது, அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.ஏனென்றால் ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். கர்பகாலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் கர்ப்பிணிகளுக்கு  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்தப் பயிற்சி, பொதுவாகக் குறைந்த தாக்க ஏரோபிக் மற்றும் நீட்சி பயிற்சிகளை உள்ளடக்கியது.இது கர்ப்பிணிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கிறது.கர்ப்ப காலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் கிடைக்கும் நன்மைகள்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பலவீனம் மற்றும் சோர்வு நீங்கும்

கர்ப்ப காலத்தில் சோர்வாகவும், பலவீனமாகவும் இருப்பது இயல்பானது தான். குறிப்பாக, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், அதிக சோர்வு  உணரப்படுகிறது. அத்தகைய சூழலில், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்ப காலத்தில் செய்யப்படும் லேசான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி, சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குகிறது.

எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே உடல்எடை அதிகரிக்கும்.ஆனால் மருத்துவர் குறிப்பிட்ட வரம்புகளைவிட உடல் எடை அதிகரித்தால், அது பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இது சிசேரியனுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது, எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது. மருத்துவரை ஆலோசித்தபின், கர்ப்ப கால உடற்பயிற்சிகளை செய்யலாம். 

தூக்கத்தை மேம்படுத்துகிறது:

பல கர்ப்பிணி பெண்களும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன.கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.நீங்களும் தூக்கமின்மையால் சிரமப்பட்டால், கட்டாயமாக உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.கர்ப்ப காலத்தில் நல்ல தூக்கத்துடன், வழக்கமான உடற்பயிற்சி செய்வது உடலின் மற்ற பிரச்சனைகளின் தாக்கத்தையும் குறைக்கிறது.

மலச்சிக்கலை போக்குகிறது

கர்ப்ப காலத்தில், பல கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழலில், உடற்பயிற்சி செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது, செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை போக்குகிறது.

exercise-during-pregnancy-for-normal-delivery

முதுகு வலிக்கு நிவாரணம்

கர்ப்ப காலத்தில் முதுகுவலியை தவிர்க்க முடியாது.குறிப்பாகக் குழந்தையின் அளவு அதிகரிக்கும்போது, அடிவயிற்றின் கீழ் கூடுதல் அழுத்தம் உண்டாகும், இதன் காரணமாக முதுகுவலியும் இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம், முதுகு வலியைக் குறைக்க முடியும்.ஆனால், உங்கள் மருத்துவரை ஆலோசித்த பின்னரே, உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

சீரான மனநிலை

கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படும். இதுமட்டுமின்றி, ஒரு சிலர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சியானது எண்டோமார்பின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, இது மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்து மனநிலையை சீராக வைத்திருக்கலாம்.

குறைவான பிரசவ வலி

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பிரசவத்தின்போது ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில், தினசரி உடற்பயிற்சி செய்வது பிரசவ வலியைக் குறைக்க உதவுகிறது. 
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இது பிரசவத்தின்போது ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வது நார்மல் டெலிவரி கான வாய்ப்பையும் அதிகப்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்னரே  உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்