குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கும் காய்கறிகள்: குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க, இளமை பருவம் முதலே இந்த 5 காய்கறிகளை அவர்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு தாய், தன் குழந்தையின் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை நிகரற்றது. இதற்காக அவர்கள் தொடர்ந்து பல்வேறு வகையான புரோட்டீன் பவுடர்கள், உலர் பழங்கள் போன்றவற்றை குழந்தைக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இது பயனளிப்பதில்லை. தன் குழந்தையின் உயரம் கூடாமல் இருப்பதை நினைத்து வருந்தும் தாய்மார்கள், உயரத்தை அதிகாரிப்பதற்காக மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள். இந்த மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க இயற்கை வளத்தைப் பயன்படுத்தலாமே! இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள காய்கறிகள் உயரத்தை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. இந்தக் காய்கறிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
டர்னிப்
டர்னிப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் டர்னிப்பை சாப்பிடக் கொடுப்பது, குழந்தைகளின் பல உடல் நல பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க உதவுகிறது. டர்னிப்பில் ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள், புரதம், கொழுப்பு மற்றும் கால்சியம் உள்ளன. இதைச் சாப்பிடுவதால் குழந்தைகளின் எலும்புகள் வலுவடைவதோடு உயரமும் கூடும்.
வெண்டைக்காய்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெண்டைக்காயை சாப்பிட வைப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. வெண்டைக்காயில் மாச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. வெண்டைக்காயை சாப்பிடும் குழந்தைகள் சரியான உடல் வளர்ச்சியடைவதோடு, உயரமாகவும் வளர்கிறார்கள்.
கீரை
கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. பசலைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் செரிமான மண்டலத்தை வலுவாக வைத்திருப்பதுடன், உயரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பசலைக்கீரை சாப்பிடுவதால் இரத்த சோகை மற்றும் பலவீனம் நீங்கும். கீரையில் பொரியல், சூப்கள், மசியல் செய்து கொடுக்கலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும் போதும் தண்ணீருக்கு பதிலாக வேகவைத்த கீரையை அரைத்துப் பயன்படுத்தலாம். பச்சை நிற சப்பாத்திக்களை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பீன்ஸ்
குழந்தைகளுக்குப் பீன்ஸ் மிகவும் பிடிக்கும். இதில் மாச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. பீன்ஸ் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது. மேலும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பீன்ஸில் பொரியல், சூப், செய்து கொடுக்கலாம் அல்லது உங்கள் குழந்தைக்கு விருப்பமான உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பட்டாணி
குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பட்டாணி உதவுகிறது. பட்டாணியில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C போன்றவை நிறைந்துள்ளன, இது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதோடு, உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இந்தக் காய்கறிகள் அனைத்தையும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாக்குங்கள்.
இந்த அனைத்து காய்கறிகளையும் உட்கொள்ளுதல் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கலாம். சிறுவயது முதலே குழந்தைகளுக்கு இதை வழக்கமாக்கினால், வளரும் பருவத்தில் காய்கறிகளை ஒதுக்கமாட்டார்கள். குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்து பிறகு உட்கொள்ளுவது நல்லது.
Images Credit: freepik