Doctor Verified

Being Single Benefits: நீங்க சிங்கிளாக இருக்கீங்களா? உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ

  • SHARE
  • FOLLOW
Being Single Benefits: நீங்க சிங்கிளாக இருக்கீங்களா? உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ

Why Being Single Is Good For You: பல ஆய்வுகள் உறவில் இருப்பதன் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கின்றன. ஆனால், தனிமையில் இருப்பதும் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. பெரும்பாலும், தனிமையில் இருப்பதை விட உறவில் இருப்பதன் நன்மைகளையே அதிகம் பேசுவர். எனினும், தனிமையில் இருப்பதன் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, வாழ்வில் வெற்றி அடைந்த நபர்கள் பெரும்பாலானோர் தனிமையில் இருந்தவர்களே ஆவர். ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் அமையும் சில தனிமையின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

தனிமையில் இருப்பது

எல்லோர் மனதிலும் எழும் கேள்வி, ஏன் தனிமையில் இருக்க வேண்டும் என்பது தான். தனிமையில் இருக்க வேண்டுமெனில் தோழமை, ஆதரவு அமைப்பைப் பற்றி ஏன் அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கு பதில் தனிமை தேவையான ஒன்றாகும். அதே சமயம் கூட்டாளியை வைத்திருப்பதும் உங்களை முன்னேற ஊக்குவிக்கும்.

தனிமையில் இருப்பதன் நன்மைகள் குறித்து லக்னோவில் உள்ள ஹெல்த்கேர் கிளினிக்கின் மருத்துவ உளவியலாளரான டாக்டர் தனு சௌத்ரி அவர்கள் விளக்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வின் படி தனியாக இருப்பவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிணைப்பு வைத்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் தேவைக்கு உதவும் சிறந்த நபர்களின் அனுகல்களையும் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: Stages of Love: ஒரு உறவில் அன்பின் நிலைகள் என்னென்ன?

தனிமையில் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கூட்டாளியுடன் இருப்பதை விட தனிமையில் இருக்கும் போது சில நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

அதிகமாக வேலை செய்ய நினைப்பது

தனிமையில் இருக்கும் நபர்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் செலவிடுவதைக் கண்டிருப்போம். இது அவர்கள் தங்களை அழகாகக் காட்ட விரும்புவதும், கூட்டத்தில் தனித்து நிற்க வைப்பதுமே ஆகும். மேலும் உடற்பயிற்சி செய்வது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நடத்திய ஆய்வின் படி, தனிமையில் இருக்கும் நபர்கள் ஜிம்மில் சேரும் விகிதம் அதிகம் ஆகும். அதிலும், குறிப்பாக ஆண்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களின் உடல் நலம் குறித்து அதிக விழிப்புணர்வுடன் காணப்படுவர் என்பது கண்டறியப்பட்டது.

குறைந்த மன அழுத்தம்

தனிமையில் இருக்கும் நபர்கள் குறைந்த அளவு மன அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் உறவுகள் உள்ள நபர்கள் அதிகமான மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். இதில் நிதி அழுத்தமே முக்கிய காரணமாகும். தனிமையில் இருக்கும் போது சம்பாதித்து அதை உங்களுக்காக செலவழிக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு நீங்கள் செலவழிப்பதைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: காதல் துணையை எரிச்சலூட்டும் 5 விஷயங்கள்

மகிழ்ச்சியாக இருத்தல்

பல ஆய்வுகளில் தனிமையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக பெண்கள், திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகின்றன. பொதுவாக தனிமையில் இருப்பது ஒருவரை திறந்த மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. தனியாக இருக்கும் நபர்களுக்கு அவர்களின் இலக்குகளில் கவனம் செலுத்த அதிக நேரம் கிடைக்கிறது. இதனால், அவர்களுக்கு வெகுமதியும் கிடைக்கும்.

நேரத்தை சரியாக ஒதுக்குதல்

உறவில் இருக்கும் நபர்களுக்கு, கூட்டாளரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால், தனிமையில் இருக்கும் நபர்களுக்கு நேரம் தாராளமாகக் கிடைக்கும். எனவே, இவர்கள் சொந்த அட்டவணையை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையின் இலக்கை அடைவதற்கான பாதையில் நேரத்தை செலவிடலாம்.

நன்றாக தூங்குதல்

தனிமையில் இருப்பது நிம்மதியான தூக்கத்தைத் தரும் என்பது முற்றிலும் உண்மை ஆகும். இதனை தனிமையில் இருக்கும் நபர்களே அதிகம் அறிவர். தூக்கம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். நல்ல தூக்கமே வளமான வாழ்விற்கு ஆதாரமாகும். இவ்வாறு இரவு தூக்கத்தை நன்றாக தூங்குபவரகள், சிறப்பாக கவனம் செலுத்த முடியும். மேலும், இது சிறந்த மனநிலையை நல்கும். மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியதாக அமையும்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்