தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா

By Balakarthik Balasubramaniyan
24 Sep 2023

வெள்ளரிக்காய்

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

ஊட்டச்சத்துகள்

வெள்ளரிக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்றவை உள்ளது

நீரேற்றத்தை ஊக்குவிக்க

வெள்ளரிக்காய் சுமார் 96% நீரைக் கொண்டிருப்பதால், இது உடலுக்கு நீரேற்றத்தைத் தருகிறது. இவை தினசரி திரவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது

இரத்த சர்க்கரையைக் குறைக்க

வெள்ளரிக்காய் உடலில் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது சர்க்கரையினைத் திறம்பட குறைக்க மற்றும் கட்டுப்படுத்த உதவுகிறது

உணவில் சேர்க்க எளிது

வெள்ளரிக்காய் சுவையுடன் கூடிய புத்துணர்ச்சியைத் தருவதாகும். இதை பல்வேறு வழிகளில் எளிதாக உணவில் சேர்க்கலாம்

ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக

வெள்ளரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது

குடல் இயக்கத்திற்கு

வெள்ளரிக்காய் குடல் இயக்கத்தை ஆதரிக்க உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல்லைத் தடுத்து சீராக பராமரிக்க உதவுகிறது