Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்கPapaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

Papaya Benefits In Empty Stomach: இன்று அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று பப்பாளிப்பழம் ஆகும். இது ஒரு சுவையான பழம் தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அந்த வகையில் உடல் எடையைக் குறைய, நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

பப்பாளி பழத்தின் ஊட்டச்சத்துக்கள்

பப்பாளி பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, ஈ, மற்றும் ஏ, நார்ச்சத்துக்கள், என்சைம்கள், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு வழிகளில் நன்மை தருகிறது.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான மேம்பாட்டிற்கு

பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது. இது செரிமான மேம்பாட்டிற்கு உதவும் நொதி ஆகும். காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வதன் மூலம் செரிமான மேம்பாட்டை உணரலாம். இது நாள் முழுவதும் உணவைத் திறம்பட பதப்படுத்துவதை எளிதாக்க உதவுகிறது. இதனுடன், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?

இரத்த சர்க்கரையை சீராக்க

பப்பாளி குறைந்த சர்க்கரை மற்றும் அதிகளவு நார்ச்சத்து கொண்ட பழமாகும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. எனவே வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், இது மற்ற பழங்களைப் போல் அல்லாமல் நீரிழிவு அல்லது அதிக சர்க்கரை கொண்டவர்களுக்கு கூடுதல் சிறப்பாக உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்க

பப்பாளி ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே, வெறும் வயிற்றில் பப்பாளியை எடுத்துக் கொள்வது உடலில் வீக்கத்தின் அளவைக் குறைப்பதுடன், நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

எடை இழப்பை மேம்படுத்த

பப்பாளி குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளதால், உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன், இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்து, நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே, நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

பப்பாளிப்பழம் வைட்டமின் ஏ நிறைந்த பழமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது. வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை உட்கொள்வது சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முகப்பருவைக் குறைக்க உதவுகிறது. முன்கூட்டிய முதுமையைத் தடுக்கவும், தோல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த பழமாக பப்பாளி பழம் அமைகிறது. பப்பாளிப்பழம் சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பழமாக இருப்பதால், இது உடலுக்கு நீரேற்றத்தைத் தர உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Oats: தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image Source: Freepik

பொறுப்புத் துறப்பு

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, காலக்கெடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன; இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இணையதளம் வழங்கும் எந்த தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பப்படி மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதில்கள்/கருத்துகள் வடிவில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் ஏதேனும் ஆலோசனை/உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன், தகுதிவாய்ந்த மருத்துவப் பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்