வாயுத் தொல்லை நீங்க சிறப்பான வீட்டு வைத்தியங்கள்

By Balakarthik Balasubramaniyan
24 Sep 2023

வாயுத்தொல்லை

பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று வாயுத்தொல்லை. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளாதது, செரிமானப் பிரச்சனை போன்றவற்றால் ஏற்படலாம்

ஓமம்

வாயுத்தொல்லை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக ஓமம் உதவுகிறது. இது பித்த சாறினைக் கட்டுப்படுத்தி உணவைச் செரிக்க உதவுகிறது

பூசணிக்காய்

வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையை நீக்க மஞ்சள் பூசணிக்காய் சிறந்த தீர்வாகும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

மோர்

வாயுத்தொலை நீங்க மற்றும் வாயுவால் ஏற்படும் தசை குத்தல், மார்பு வலி போன்றவற்றைச் சரி செய்ய மோர் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள ப்ரோ பயாடிக் பண்புகளே காரணமாகும்

எலுமிச்சை நீர்

எலுமிச்சையானது உடலில் ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் நீங்க உதவுகிறது

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் வயிறு மற்றும் குடலில் தேங்கும் வாயுக்களை வெளியேற்றி வயிறு வீக்கமடைவதை குறைக்கச் செய்கிறது

பூண்டு

வாயுத்தொல்லையை நீக்க பூண்டு உதவுகிறது. பூண்டு பற்களை நசுக்கி நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்

இஞ்சி

வயிற்று வலி, தொண்டை வலி என பல பிரச்சனைக்கு தீர்வாக இஞ்சி அமைகிறது. இது உடலில் அஜீரணக் கோளாற்றை சரி செய்வதுடன், வாயுத்தொல்லை, வயிறு உப்புசத்தை நீக்க உதவுகிறது