Difference Between Dementia And Alzheimer's Disease: அல்சைமர் மற்றும் டிமென்ஷியா இரண்டம் மூளை தொடர்பான நோயைக் குறிப்பதாகும். இதில் ஒரு நபர் தனது நினைவாற்றலை இழக்க நேரிடலாம். ஆனால், இந்த இரண்டு நோய்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அல்சைமர் மற்றும் டிமென்ஷியா இரண்டும் அறிகுறிகள், காரணங்கள், உண்மையான நிலை மற்றும் சிகிச்சை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இதில் அல்சைமர் பொதுவாக வயதானவர்களிடம் காணப்படுகிறது. இதனால் காலப்போக்கில் நோயாளியின் நிலை மோசமடையத் தொடங்குகிறது. மூளையில் சில புரதங்கள் சேகரிக்கப்பட்டு, மூளை சுருங்கத் தொடங்குகிறது. இதனால் மூளை செல்கள் படிப்படியாக சேதமடையத் தொடங்குகின்றன. இதில் நபர் தனது நினைவாற்றலை இழக்கிறார். மேலும், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதுவும் நினைவில் இருக்காது. இவர்கள் கற்பனையில் மட்டுமே வாழ்கின்றனர். இந்த அல்சைமர் மற்றும் டிமென்ஷியா ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து குருகிராம் நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் ஆலோசகர் மருத்துவர் ரஜத் சோப்ரா அவர்கள் விளக்கியுள்ளார்.
அல்சைமர் மற்றும் டிமென்ஷியா இடையான வேறுபாடுகள்
மூளையில் ஏற்படும் நோய்களான அல்சைமர் மற்றும் டிமென்ஷியா இடையே உள்ள வேறுபாடுகளை, நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்பகால, சிகிச்சை உள்ளிட்டவற்றைப் பொறுத்துக் கூறலாம். இப்போது அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Sleep Talking: தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்? காரணம், சிகிச்சை குறித்து நிபுணர்கள்
ஆரம்பகால வேறுபாடு
ஆரம்பகால அல்சைமர் நோய் – இது பொதுவாக 65 வயதுக்குப் பிறகு ஏற்படும் நோயாகும். எனினும், சில சந்தர்ப்பங்களில் 40 வயது வரை இருக்கும் நபர்களும் இதனால் பாதிப்படைகின்றனர். இதில், ஒருவர் நினைவாற்றல் இழப்பு சிக்கலை எதிர்கொள்கிறார். மேலும் இது பின்னர் அறிவாற்றல் இழப்பாக மாறும் (கை மற்றும் கால்களை இயக்குவதில் சிரமம் உண்டாகும்)
ஆரம்ப கால டிமென்ஷியா – இது தொடர்பான மனநலக்கோளாறுகள், இளமைப்பருவம் அல்லது குழந்தைப் பருவம் உட்பட எந்த வயதிலும் தோன்றலாம். இது நபருக்கு நபர் மாறுபடும். இதில் அடிக்கடி பைத்தியக்காரத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்படுவர். மற்றவர்களில் இந்த பிரச்சனை அரிதாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
காரணங்கள்
அல்சைமர் நோய் காரணங்கள் – இது மூளையில் உள்ள அசாதாரண புரதப் படிவுகளால் ஏற்படும் நரம்பியல் கடத்தல் கோளாறு ஆகும். இதனால் மூளை செல்கள் பாதிக்கப்பட்டு சேதமடையலாம். இது முக்கிய உடல் மாற்றங்களால் ஏற்படும் நோயாகும்.
டிமென்ஷியா நோய் காரணங்கள் – கடுமையான மனச்சோர்வு, இருமுனைக் கோளாறு, ஸ்கிசோஃப்ரினியா போன்ற பல்வேறு நோய்களால் டிமென்ஷியா ஏற்படலாம். இதில், மூளையானது உடல் ரீதியான மாற்றங்களை விட, உளவியல் மற்றும் மரபணு உள்ளிட்ட பிற காரணிகளால் அடிக்கடி பாதிப்படையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Tumor Symptoms: மூளைக்கட்டி வகைகள், அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள்
அறிகுறிகள்
அல்சைமர் நோய் அறிகுறிகள் – இதன் அறிகுறிகளில் முக்கியம் அறிவாற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகும். இதனால் எதையும் புரிந்து கொள்ள இயலாத தன்மை, பேசுவதில் சிரமம், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்படலாம். மேலும், அன்றாட பணியைச் செய்வதில் சிரமம் ஏற்படுவது, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்தல், முக்கிய விஷயங்களை மறந்து விடுவது, சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனைகள் அடங்கும்.
டிமென்ஷியா நோய் அறிகுறிகள் – டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், பல அறிகுறிகளை அனுபவிக்கலாம். அதன் படி, மாயத்தோற்றங்கள், மனநிலை மாற்றங்கள், பிரமைகள், சிந்தனை செய்வதில் தொந்தரவு போன்றவை ஏற்படலாம். இதில் ஒரு சிலர் அதிக மகிழ்ச்சியையும், சில சமயங்களில் அதிக சோகத்தையும் உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Tumor: நீங்கள் கவனிக்க வேண்டிய மூளைக்கட்டியின் முக்கிய அறிகுறிகள்
சிகிச்சைகள்
அல்சைமர் நோய் சிகிச்சை முறைகள் – அல்சைமர் நோய்க்கு தற்போது சிகிச்சை முறைகள் இல்லை. எனினும் மருத்துவரின் பரிந்துரையில் சில மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் அறிகுறிகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கலாம்.
டிமென்ஷியா நோய் சிகிச்சை முறைகள் – டிமென்ஷியாவின் உண்மையான காரணங்களைக் கண்டறிவதன் மூலம், அதற்கான சரியான சிகிச்சையைப் பின்பற்ற முடியும். இன்றைய சூழ்நிலையில் மூளை பிரச்சனைகளைச் சமாளிப்பதற்குப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் மருத்துவர் முதலில் நோயாளியின் நோயை அடையாளம் காண வேண்டும். பிறகு முறையான சிகிச்சை அளித்து குணமாக்கலாம்.
அல்சைமர், டிமென்ஷியா என இரண்டு நோய்களும் மூளை தொடர்பான நோய்களாகும். பல்வேறு மூளை நோய்கள் டிமென்ஷியாவில் சேர்க்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நோயினாலும் இதைப் புரிந்து கொள்வது கடினமாகும். சிக்னலிங் பாதை மற்றும் மூளை நரம்பியலில் ஏற்படும் கோளாறுகளால் டிமென்ஷியா ஏற்படுகிறது. எனவே, மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுமாயின் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பவரா நீங்க? கவனம் உங்க மூளை நரம்புகள் சேதமடயலாம்
Image Source: Freepik