மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

  • SHARE
  • FOLLOW
மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்

மாதவிடாய் கால சரும பராமரிப்பு முறைகள்: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் தசைப்பிடிப்புகள் போன்ற தவிர்க்கமுடியாத சில வலிகளோடு, சரும பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.வறண்ட சருமம் மற்றும் பருக்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்.  மாதவிடாயின்போது யாராவது உங்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எண்ணுவதை போலவே, உங்கள் சருமத்திற்கும் சிறப்பான கவனிப்பு தேவைப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில், பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றத்தால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் வரலாம், எனவே இந்த நாட்களில் உங்கள் சருமத்தை  கவனித்துக் கொள்ளவேண்டியது அவசியம்.  மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்கும் சில பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகப்பரு

மாதவிடாய் காலங்களில், சரும துளைகள் பெரிதாகின்றன, இதனால் சருமம் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. சில சந்தர்ப்பங்களில், சருமம் வறண்டும் போகலாம். இதைச் சமாளிக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். உங்கள் முகத்தைக் கழுவுவதற்கு லேசான ஃபேஸ் வாஷ்  ஐ பயன்படுத்தவும்.முகத்தைக் கழுவிய பின், டோனர் தடவி உலற விடவும். இறுதியாக மாய்ஸ்சரைசரை பூசிக் கொள்ளுங்கள்.

how-can-i-clear-my-skin-during-my-period

ஃபேஷியல்

இந்த நாட்களில் முகத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஃபேஷியல் செய்து கொள்வது உங்கள் முக சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.இது சருமத்தை சுத்தப்படுத்துவதோடு, ஃபேஷியலின்போது செய்யப்படும் மசாஜ் மன அழுத்தத்தையும் குறைக்கும்.மேலும் சரும ஈரப்பதத்தை பராமரித்து, பருக்கள் ஏற்படமால் தடுக்கிறது.

மேக்கப் போடுவதை தவிரத்திடுங்கள் 

மேக்கப் உங்கள் முகத்தின் துளைகளை அடைத்து மென்மையான தோற்றத்தை அளிக்கிறது. மேக்கப் மாதவிடாய் காலத்திற்கு ஏற்றதல்ல. மேக்கப்பிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். அல்லது துளைகளை அடைக்காத தன்மைகள் கொண்ட ஃபவுண்டேஷன், BB, CC க்ரீம்களை பயன்படுத்துங்கள்.

உணவுமுறை

மாதவிடாய் காலங்களில் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பண்புகள் நிறைந்துள்ள உணவை இந்த நாட்களில் சாப்பிடுங்கள். இது சருமத்தை வறண்டு போகாமல், பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு