உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்

  • SHARE
  • FOLLOW
உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கான சரும பராமரிப்பு முறைகள்: 30 வயதிற்குப் பிறகு சரும பராமரிப்பு மிகவும் முக்கியமானது. இந்த டிப்ஸின் உதவியுடன், 30 வயதிலும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, சருமத்தின் பொலிவு குறையத் தொடங்குவதால், சிறந்த கவனிப்பு தேவைப்படுகிறது. பெண்கள் தங்கள் சருமத்தை கவனக்காவிட்டால், 30 வயதிற்குப் பிறகு, சருமம் தளர்வாகி, முகத்தின் அழகும் குறைந்துவிடும். இந்த நேரத்தில் சருமத்தை பராமரிக்க ஒரு சில விஷயங்கள் தேவைப்படுகிறது. இவற்றை கடைபிடிப்பதன் மூலம், சருமம் பளபளப்பாக, இறுக்கமாக மாறும். மேலும், சருமத்தில் காணப்படும் வயதான அறிகுறிகளும் குறையும்.

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கான சரும பராமரிப்பு வழக்கத்தைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மாய்ஸ்சரைசர்

30 வயதிற்குப் பிறகு சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்வது மிகவும் அவசியம். உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து கொள்ளவும். மாய்ஸ்சரைசர் சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தை பளபளப்பாக்கும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், சுருக்கங்கள் பிரச்சனையிலிருந்து விடுபடவும் மாய்ஸ்சரைசர் உதவுகிறது.

டோனர்

சரும பராமரிப்பு வழக்கத்தில் டோனரைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். டோனரின் பயன்பாடு சருமத்தில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்வதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்கிறது. சரும வறட்சி பிரச்சனையை நீக்கிச் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்ற டோனர் உதவுகிறது.

சீரம்

சீரம் பயன்படுத்துவதன் மூலம் சரும உயிரணுக்கள் சீரடைகின்றன. சீரம் பயன்படுத்துவதற்கு பதிலாக வைட்டமின் E காப்ஸ்யூல்களையும் பயன்படுத்தலாம். இரவில் சீரம் பயன்படுத்துவது சருமத்திற்கு ஊட்டமளித்து சருமத்தை பளபளப்பாக்கி, பல சரும பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

சன்ஸ்கிரீன்

முகத்தைப் பராமரிக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதால் சரும பாதிப்புகள் தடுக்கப்படும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனை வெயிலில் செல்வதற்கு முன் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் உதவுகிறது.

கண்களுக்கான கிரீம்

பல சமயங்களில் 30 வயதிற்குப் பிறகு, பெண்களுக்குக் கருவளையம் பிரச்சனை அதிகமாகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, கண்களுக்கான கிரீம் பயன்படுத்த வேண்டியது அவசியம். இது கருவளையங்களை நீக்கி, கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றது. இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி கண்களுக்கான க்ரீம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு, தூக்கம் மற்றும் போதுமான தண்ணீர் உட்கொள்ளல் ஆகியவை சருமத்திற்கு மிகவும் முக்கியம். இதையும் கவனியுங்கள். தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

Images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு