பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடல் பலவீனத்தை சமாளிக்க இந்த 5 உணவுகளைச் சாப்பிடுங்கள்.
பெண்கள் தாயான மறுகனமே, அவர்களின் சிந்தனை முழுவதும் தங்கள் குழந்தையைச் சுற்றியே அமைந்திருக்கும்.வீட்டுப்பொருப்பு, வேலை, தூக்கமில்லாத இரவுகள், மனநிலை மாற்றங்கள் என்ன அனைத்தையும் சமாளித்து வாழும் ஒவ்வொரு பெண்ணும் "சிங்க பெண்களே". குழந்தை, வீடு மற்றும் உறவுக்காக யோசிக்கும் நீங்கள், உங்களைப் பற்றி சிந்தித்ததுண்டா?குழந்தை பிறந்தபிறகு, பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதன் காரணமாக பலவீனம், சோர்வு, உடல் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகின்றன. பிரசவத்திற்கு பின், பெண்கள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படலாம்.நீங்கள் சாப்பிடும் உணவிலுருக்கும் சத்துக்கள், தாய்ப்பால் மூலமாகக் குழந்தையைச் சென்றடையும் என்பதை மறவாதீர்கள். பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் பலவீனத்தை நீக்க இந்த 5 உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உலர்பழங்கள்
உலர்பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உலர் பழங்களைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முந்திரி, பாதாம், அக்ரூட் மற்றும் மக்கானா போன்றவற்றை சாப்பிடலாம்.உலர் பழங்களை உண்பதன் மூலம் தாய் பால் சுரப்பையும் அதிகரிக்கலாம்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். உடல் எடையைக் கட்டுப்படுத்த பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடலாம்.பச்சைக் காய்கறிகளில் கீரை, கோஸ், ப்ரோக்கோலி, பட்டாணி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதால் உடல் வலுவடைவதோடு, உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தும் கிடைக்கும். இதனால் உடலில் இரத்த பற்றாக்குறையும் ஏற்படாது.
ஓட்ஸ்
ஓட்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ஓட்ஸ் சாப்பிடுவதால் செரிமான அமைப்பு வலுவடையும்.மேலும், உடல் எடையும் அதிகரிக்காது.ஓட்ஸில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் ஏராளமாக உள்ளன. உங்களுக்கு விருப்பமான காரம் அல்லது இனிப்பு சுவையில் இதை செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் சாப்பிடுவது பெண்ணின் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
முட்டை
முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதன.இதில் அதிகமுள்ள புரதம், உடலை வலுப்படுத்த உதவுகிறது. முட்டையை உட்கொள்வதால், உடல் வலிகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். முட்டையில் உள்ள ஒமேகா 3 உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பேரிச்சம்பழம்
பேரிச்சம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்பெறுகிறது. மேலும், உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையையும் நிவர்த்தி செய்கிறது.இனிப்பு சுவையுடைய பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால், உடலின் சர்க்கரை அளவு மற்றும் எடை அதிகரிக்காது. காலை நேர உணவுடன் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகப் பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம்.
பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் பலவீனத்தைப் போக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது அலர்ஜி இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே இந்த உணவுகளை உட்கொள்ள தொடங்க வேண்டும்.
Images Source: freepik