கர்ப்ப காலத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுகிறீர்களா? உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
கர்ப்ப காலத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுகிறீர்களா? உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இதோ!

கர்ப்பமாக இருக்கும்போது அதிகம் கோபப்படுகிறீர்களா? இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.

கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதே. பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாட்களை எண்ணி கொண்டிருக்கும் உங்கள் உணர்வுகளை ஒரு தாயாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆரம்பத்தில், உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கையாளுவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். சின்ன விஷயங்களுக்குக் கூடக் கோபம் வரும். மனதுக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாக நடந்துகொண்டு, பிறகு வருந்திய நாட்களையும் கடந்து வந்திருப்பீர்கள். கர்ப்ப காலத்தில், இந்தக் கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகளால் மன அழுத்தம் உண்டாகலாம். தாயின் மன அழுத்தம், கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மன அழுத்தம் காரணமாக உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையையும் சந்திக்க நேரிடலாம். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அடிக்கடி கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் கவலை மற்றும் கோபத்தை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை வளர்த்திடுங்கள்.

1. அதிகாலையில் தியானம் செய்யுங்கள்

கருவில் இருக்கும் குழந்தைக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவும், மனதை அமைதியாக வைத்திருக்கவும் அதிகாலையில் தியானம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கும். உங்கள் மனதை அமைதிபடுத்தி, உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க தியானம் செய்யுங்கள். மாலையில் சிறு தூர நடைப்பயிற்சி செய்யலாம். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.மேலும் மனநிலை மாற்றங்கள் அல்லது மனத்தளர்ச்சியின் அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது.

2. உங்கள் கோபத்தைத் தணிக்க ஓய்வெடுங்கள்

இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, பணிபுரியும் பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு தரப்பினரும் நாள் முழுவதும் வேலையில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில், சற்று ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், இது பெரும்பாலான பெண்களால் புறக்கணிக்கப்படுகிறது. போதுமான ஓய்வின்றி, கோபம் அல்லது எரிச்சலை உணர்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் ஓய்வெடுங்கள். இது உங்கள் மனநிலையை சீராக்கி, உடலையும் ஆற்றலுடம் வைத்திருக்கும்.

3. மனதை வெறுமையாக விட வேண்டாம்

கர்ப்ப காலத்தில் ஓய்வெடுங்கள், ஆனால் மனதை வெறுமையாக விடக் கூடாது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், இந்த வெறுமை உங்களை எரிச்சலடைய செய்யலாம். மேலும், எதிர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, உங்களுக்குப் பிடித்த விஷயத்தில், உங்கள் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பொழுதுபோக்கிற்கு நேரத்தைச் செலவிடுங்கள். உங்களுக்கு நடனம், பாடல், ஓவியம் அல்லது வேறு ஏதேனும் பொழுதுபோக்கில் ஆர்வம் இருந்தால், கண்டிப்பாக அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

4. கர்ப்பகால உணவு முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன நல பிரச்சனைகளைத் தவிர்ப்பதில், உணவு பெறும் பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து நிறைந்த பசுமையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல மனநிலையை உருவாக்கும் கனிமமாக நார்ச்சத்து கருதப்படுகிறது. இது தவிர, கர்ப்ப காலத்தில் சமச்சீரான உணவைச் சாப்பிடுங்கள். மாவுச்சத்துக்கள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், போன்றவற்றை சரிவிகிதத்தில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. கர்ப் சன்ஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

கர்ப் சன்ஸ்கார் என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்குக் கருவில் கல்வி என்று பொருள். மன அழுத்தம் மற்றும் கோபத்தை போக்க, கர்ப் சன்ஸ்கார் முறையைப் பின்பற்றவும். இதில் இசை கேட்பது, நல்ல உணவு உண்பது, தியானம் செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கர்ப் சன்ஸ்கார், தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் உணர்ச்சி, ஆன்மீகம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்த நல்ல இசையைக் கேளுங்கள். மந்திரங்களை உச்சரிப்பது, யோகா செய்வது கர்ப் சன்ஸ்காரத்தில் நன்மை பயக்கும்.

கர்ப்ப காலத்தில் கோபம்: கர்ப்ப காலத்தில் கோபத்தை கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவு, யோகா, தியானம், கர்ப்ப சன்ஸ்கார் விதி, ஓய்வு போன்ற பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள்.

images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்