இனி சலிக்காமல், ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்வதற்கு இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
பரபரப்பான வாழ்க்கை சூழிலில், பலரால் தினசரி உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சியை தவிர்ப்பதும் உண்டு.ஒரு சில நாட்கள் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாமல் போகலாம். அதேசமயம் சில நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் இல்லாமலும் போகலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உடலின் செயல்பாடு குறைந்தால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம்.உடற்பயிற்சியை கொஞ்சம் எளிமையாக்கினால், அதை எளிதாகச் செய்திடலாம்.இந்தப் பதிவில், இது போன்ற 5 உதவிக்குறிப்புகளைப் பார்க்கலாம், இதன் உதவியுடன் உடற்பயிற்சியை எளிதாக்கலாம்.
உடற்பயிற்சிக்கு முன் ஏதாவது சாப்பிடுங்கள்
உடலில் போதுமான ஆற்றல் இல்லாதபோது, பலர் உடற்பயிற்சி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் புரதம், கால்சியம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். ஆரோக்கியமான பானங்களையும் உட்கொள்ளலாம். ஆற்றல் இல்லாமல் உடற்பயிற்சி செய்தால், அதிக நேரம் கவனம் செலுத்துவது கடினமாகி, உடற்பயிற்சியும் பாதியில் தடைப்பட்டுவிடும். காலையில் எழுந்த அரை மணி நேரத்திற்குள் நீங்கள் ஏதாவது சாப்பிட்டு விட வேண்டும் என்று பல நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
உடற்பயிற்சிக்கான சரியான நேரம் என்ன?
உடற்பயிற்சியை எளிதாக்க, அதை எப்போது செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு நபரும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு இரவில் தாமதமாகத் தூங்கும் பழக்கம் இருக்கும். அதே சமயம் ஒரு சிலருக்கு மார்னிங் சிக்னஸ் பிரச்சனையும் இருக்கும்.இத்தகைய சூழலில், காலையில் உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடல்நிலையை மோசமாக்கலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் உடற்பயிற்சியை திட்டமிடுங்கள். மாலையில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு எளிதாக இருந்தால், நடைப்பயிற்சி அல்லது எளிமையான உடற்பயிற்சியை நீங்கள் தேர்வு செய்யலாம். உடற்பயிற்சியை எளிதாக்க, நல்ல தூக்கமும் அவசியம்.
வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்
உங்களுக்கு வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வது சிரமாக இருந்தால், வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்யலாம். பலர் ஜிம்மிற்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக உடற்பயிற்சிகளையும் தவிர்க்கிறார்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் உடல் செயல்பாடுகள் பாதிப்படையலாம். உங்களுக்கு வெளியே செல்வதில் விருப்பம் இல்லையென்றால், வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். வெளியே செல்ல விரும்பாதவர்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம் அல்லது மொட்டை மாடியில் நடைப்பயிற்சியும் செய்யலாம்.
உடற்பயிற்சியின் செட் அளவை குறைக்கவும்
உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்காகவே தவிர, அதைக் குறைப்பதற்காக அல்ல. உடற்பயிற்சியின் இலக்கை அடைவதற்கு, பல உடற்பயிற்சி செட்களைச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால், உடற்பயிற்சியின் செட் அளவைக் குறைக்கவும். ஒரு உடற்பயிற்சி எத்தனை முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது என்பது செட்களில் கணக்கிடபடுகிறது. உதாரணமாக, ஒரு உடற்பயிற்சியை 5 முறை மீண்டும் செய்வது, 5 செட் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் வழக்கத்தில் 4 முதல் 5 வெவ்வேறு உடற்பயிற்சிகளைச் சேர்க்கவும். இவற்றில் 2 முதல் 3 செட் மட்டுமே செய்தால் போதுமானது.
இசையைக் கேட்கலாம்
உடற்பயிற்சியை எளிதாக்க இசை கேட்கலாம். உடற்பயிற்சியை ரசித்து செய்வதன் மூலம், அதை நீண்ட நேரம் செய்யலாம். இதனுடன், நீங்கள் இயந்திரங்களில் உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக நடனமும் ஆடலாம். இயந்திரங்கள்மூலம் உடற்பயிற்சி செய்வதில் சிரமம் உள்ளவர்கள், பாங்க்ரா, ஏரோபிக்ஸ், ஃப்ரீ டான்ஸ் போன்ற பயிற்சிகள்மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது உங்களுக்கு மகிழ்ச்சியளித்தால் இது போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துக்கொள்ளலாம்.
இந்த முறைகளைப் பின்பற்றி உடற்பயிற்சியை எளிதாக்கலாம். மேலும் உற்சாகமாகவும் உடற்பயிற்சி செய்யலாம்.
image source: freepik