பருவ கால மாற்றத்தின் போது ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்த, சில குறிப்புகளை இங்கே காணலாம்.
பருவ கால மாற்றத்தின் போது, பலர் முடி உதிர்வை சந்திக்கின்றனர். வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள், ஈரப்பதப் பற்றாக்குறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.
முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கான குறிப்புகள்
சத்துள்ள உணவு
முடியை ஆரோக்கியமாக பராமரிப்பதில், சமநிலை உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். கீரைகள், பழங்கள், நட்ஸ், மீன் மற்றும் முட்டை போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை உங்கள் முடியின் வலிமைக்கு உதவுகிறது. மேலும் தலைமுடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்க நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். அதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
முடி பராமரிப்பு
பருவ கால மாற்றங்களில் முடி உதிர்வை தடுக்க, முடியை நன்கு பராமரிக்க வேண்டும். இதற்கு, தலைமுடியை சுத்தப்படுத்தவும், நீரேற்றம் நிரம்ப வைத்திருக்கவும் முடிக்கு ஏற்றவாறு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும். முடியை அதிகபடியாக அலசுவதையும், கடுமையான பொருட்களை உபயோகிப்பதையும் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் உச்சந்தலையில் இருந்து இயற்கை எண்ணெய் பிசுபிசுப்பை அகற்றி, வறட்சி மற்றும் முடி உடைவதற்கு வழிவகுக்கும்.
மசாஜ் செய்யவும்
உச்சந்தலையில் மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களைத் தூண்டவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவும். இதற்கு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. எண்ணெயை சிறிது சூடுபடுத்தி, உச்சந்தலையில் லேசாக வட்டவடிவில் 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். ஷாம்பு போடுவதற்கு முன் இவ்வாறு செய்வது நல்லது. இந்த நடைமுறையால் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதோடு, முடியின் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சுற்றுச்சூழலில் இருந்து பாதுகாப்பு
பருவகால மாற்றங்களின் போது, தீவிர வெப்பநிலை, ஈரப்பதப் பிரச்சனை மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும். இந்த விளைவுகளை குறைக்க, வெளியே செல்லும் போது, குறிப்பாக கடுமையான வெயிலில் வெளியே செல்லும் போது, தொப்பி அணிவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம், தலை முடி உதிராமல் இருக்கும். மேலும் இது ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
ஹீட் ஸ்டைலிங்கை தவிர்க்கவும்
அதிகப்படியான ஹீட் ஸ்டைலிங் கொண்டு ஸ்ட்ரெயிட் செய்வது, கர்லிங் செய்வது, ப்ளோ ட்ரையர்களைப் பயன்படுத்துவது போன்றவை முடியை வலுவிழக்கச் செய்து, முடி உடைவை ஏற்படுத்தும். முடிந்த வரை இயற்கையான முடி அலங்காரத்தை செய்யவும். இல்லையெனில், ஹீட் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தவும். ஏர் ட்ரையிங்கை தேர்ந்தெடுப்பது, உங்கள் தலைமுடியை வெப்பத்தில் இருந்து காக்கவும், ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியை பெறுவதற்கும் வழிவகுக்கும்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க யோகா, தியானம் அல்லது வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றலாம். இவை நல்ல ஓய்வுக்கு வழிவகுக்கும். மேலும் இவை மன அழுத்தத்தை குறைத்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.
முடி வெட்டுதல்
முடிகளில் ஏற்படும் பிளவுகளை அவ்வப்போது வெட்டுவதன் மூலம் முடி உடைவை தடுக்க முடியும். ஆறு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் முனைகளை வெட்டுவது, சேதமடைந்த மற்றும் பலவீனமான முடியை அகற்ற உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மருத்துவரை அணுகவும்
பருவகால மாற்றங்களின் போது அதிகப்படியான முடி உதிர்வை நீங்கள் சந்தித்தால், மருத்துவரை உடனடியாக அணுகவும். மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றியும், முடியில் நிலை மோசமாக இருந்தால், தோல் மருத்துவர் அல்லது ட்ரைக்காலஜிஸ்ட்டை அணுகுவது நல்லது. இந்த நிபுணர்கள் உங்கள் குறிப்பிட்ட நிலையை பரிசோதித்து, அதற்கான தீர்வுகளை கூறுவர். மேலும் முடியை உதிராமல் இருக்க பரிந்துரைப்பர்.
image source: freepik