Natural remedy for a baby cough : வறட்டு இருமல் மிகவும் வேதனையானது. அதுவும், இருமல் தொல்லையால் குழந்தைகள் படும் அவஸ்தையை நம்மால் பார்க்க முடியாது. பருவமழை காலம் ஆரமித்துவிட்டது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி உடல்நலக்குறைவை சந்திப்பார்கள். குறிப்பாக குழந்தைகள், அடிக்கடி சளி, காய்ச்சல், வறட்டு இருமல் என பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஆங்கில மருந்துகளை கொடுப்பதை விட, வீட்டு வைத்திய முறை மூலம் சிகிச்சையளிப்பது நல்லது. ஏனென்றால், வீட்டு வைத்தியத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இருக்காது.
உங்கள் குழந்தைக்கு பல நாட்களாக இருமல் இருந்தாலோ அல்லது இருமலால் உங்கள் குழந்தை சோர்வாக இருந்தாலோ அவர்களுக்கு ஒரு ஸ்பூன் தென் கொடுத்தால் இருமல் சரியாகிவிடும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆம், தேன் சாப்பிட்டால் இருமல் குணமாகும் என்பது உண்மைதான். அதே சமயம் எந்த வயது குழந்தைகளுக்கு எவ்வளவு தென் கொடுக்கலாம், எந்த நேரத்தில் கொடுக்கலாம் என தெரிந்து கொள்வோம்.

ஆய்வு கூறுவது என்ன?
2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இருமல் தீவிரத்தைக் குறைப்பதிலும், குழந்தைகள் நன்றாக தூங்க உதவுவதிலும் தேன்-சுவை கொண்ட டெக்ஸ்ட்ரோமெத்தோர்பானைப் போலவே தேனும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை தொண்டையில் உள்ள தொற்றுக்களை நீக்கி, நுரையீரலை சுத்தம் செய்யும். எனவே, குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் எந்த பாதிப்பும் வராது.
இந்த பதிவும் உதவலாம் : டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடைய உங்கள் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய ஐந்து உணவுகள்!
குழந்தைக்கு எவ்வளவு தேன் கொடுக்கலாம்

Healthychildren.org இன் படி, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 5 மில்லி தேன் கொடுக்கலாம். தேன் சளியை குறைப்பதன் மூலம் இருமலைக் குறைக்கும். தேன் இல்லை என்றால் கார்ன் சிரப்பும் கொடுக்கலாம். Healthchildren.org இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சந்தையில் கிடைக்கும் இருமல் சிரப்பை விட தேன் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரே இரவில் கக்குவான் இருமல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றையும் இது குணப்படுத்தும்.
இருமலுக்கு தேனை இப்படி சாப்பிடுங்கள்
NCBI இன் தகவல் படி, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இரவில் படுக்கும் முன் 2.5 மில்லி தேனை ஒரு முறை கொடுக்கலாம். அதாவது, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை முதல் ஒரு தேக்கரண்டி தேன் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை காக்க சில வழிகள்…!
மருந்தை விட அதிக பலன் தரும்

Mayoclinic.org இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்று உள்ள 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு படுக்கைக்கு முன் 2 தேக்கரண்டி தேன் கொடுக்கப்பட்டது. தேனைக் குடித்தால் குழந்தைகளுக்கு இரவில் இருமல் குறைந்து நல்ல தூக்கம் வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இருமல் மருந்துகளைப் போலவே தேன் பயனுள்ளதாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. தேன் மலிவானது மற்றும் பயனுள்ளது. எனவே, இது இருமலுக்கு சிறந்த வீட்டு வைத்தியம். ஆனால், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது.
Image Source: Freepik