Quit Drinking Alcohol: மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் கேடு. இதன் காரணமாக, புற்றுநோய் போன்ற கடுமையான நோய் தவிர, பல உடல்-மன நோய்களும் ஏற்படுகின்றன. மரணம் வரையிலான ஆபத்தை விளைவிக்கிறது. மதுவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏராளம். மது அருந்துவதால் பல மகிழ்ச்சியான குடும்பங்கள் சிதைந்து போகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் விசேஷ நாட்களில் மது அருந்தும் பலரும் மது அருந்துவதை நிறுத்துவோம் என்று தீர்மானம் எடுக்கிறார்கள். அதனுடனே அவர்கள் எடுக்கும் மற்றொரு தீர்மானம் இன்றுமட்டும் கடைசியாக நன்றாக குடித்துக் கொள்வோம் என்பதுதான். காரணம் மது அருந்துவதை விடுவது என்பது அவர்களுக்கு கடினமான விஷயமாகும். மதுவை கைவிட பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், இதற்கு வலுவான மன உறுதி மிகவும் முக்கியமானது.
இதையும் படிங்க: Eye Care Tips: வெப்பம் (ம) புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை எப்படி பாதுகாப்பது?
குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கான சில எளிய வழிகளை பார்க்கலாம்

நீங்கள் குடிப்பழக்கத்தை கைவிட விரும்பினால், முதலில் அதை நிறுத்துவதற்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் ஏன் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதைக் கண்டறியவும். நாளைமுதல் மதுவை விட்டுவிடுவேன் என்று நீங்கள் நினைத்தால், அது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஆனால் இந்த காரணத்திற்காக நான் குடிப்பதை நிறுத்துவேன் என காரணத்தை கண்டுபிடித்தால் அது சாத்தியமாகும். குடிப்பழக்கத்தால் குடும்பம் சிதைவதை உணருங்கள், கடுமையான நோய்க்கு ஆளாகப் போகிறீர்கள் என சிந்தியுங்கள், உங்களது எல்லா மரியாதையும் இழக்கிறது என்பதை உணருங்கள்.
மதுவை விட்டு வெளியேற நீங்கள் மன உறுதியுடன் இருக்க முடியும். அதனால்தான் முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்வதும் இலக்கை நிர்ணயிப்பதும் முக்கியம்.
ஸ்மார்ட் இலக்குகள்
குடிப்பழக்கத்தை விட்டுவிட ஸ்மார்ட்டான இலக்குகளை அமைக்கவும். நீங்கள் இலக்குகளை நிர்ணயித்து அவற்றைச் சந்திக்கத் தொடங்கினால், குடிப்பழக்கத்தை விட்டுவிடுவது உங்களுக்கு எளிதாக இருக்கும். குடிப்பழக்கத்தை கைவிட, நீங்கள் ஆரம்பத்தில் சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக மாதத்திற்கு ஒருமுறை என்பது போல். இதேபோல், இலக்கை நிர்ணயித்து நகர்ந்தால் குடிப்பழக்கத்தை படிப்படியாக கைவிடலாம். அதோடு மதுவின் அளவையும் குறைத்துக்கொண்டே இருங்கள்.
முதலில் எடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் குடிக்கும் நண்பர்களுடன் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் அவர்களுக்கும் உங்கள் இலக்கை கூறி அவர்களையும் பின்பற்ற வையுங்கள்.
நண்பர்களுடன் இலக்குகளை பகிருங்கள்
உங்கள் இலக்குகளை நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது நலம் விரும்பிகளுடன் பகிர்ந்துகொள்வது அவற்றை அடைய உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கூறிய வார்த்தையை காப்பாற்ற வேண்டும், அவர்களிடம் தன்மீதான நம்பிக்கையை உறுதிப் படுத்த வேண்டும் என்பதற்காவது மதுவை கைவிட வேண்டும் என்றும் இலக்கை பின்பற்ற வேண்டும் என்றும் உங்களுக்கு தோன்றும். இதன் மூலம் நீங்கள் மது அருந்துவதை எளிதாக்கலாம்.

மதுவிற்கு பதில் குளிர்பானம் அருந்துங்கள்
திருமண விழாக்களில் அல்லது நண்பர்களுடனான பார்ட்டிகளில் பெரும்பாலும் மது அருந்துவார்கள். அத்தகைய சூழ்நிலையில், நண்பர்களுடன் ஒரு விருந்தில் மது அருந்துவது போலவும் நீங்கள் உணரலாம். அந்த நேரத்தில், மதுவுக்கு பதிலாக, உங்களுக்கு பிடித்த பானத்தை குடிக்கவும். இது மது அருந்துவதை நிறுத்த உதவும்.
இதையும் படிங்க: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சிந்தனையை திசை திருப்புங்கள்
மது அருந்துவதை உங்களால் முற்றிலுமாக நிறுத்த முடியாவிட்டால், உங்கள் உணர்வுகள், மதுவின் மீது நீங்கள் ஏங்குவதற்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்துவதற்கு அதிக விருப்பத்தை உணரும்போது அந்த சூழ்நிலைகளையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், மது அருந்துவதற்கான உண்மையான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதை செய்தாலே போதும். மது அருந்தும் உங்கள் எண்ண ஓட்டத்தை திசை திருப்புங்கள்.
image source: freepik