பொடுகை விரட்ட வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
பொடுகை விரட்ட வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை நீக்குகிறது.

தலைமுடி பிரச்சனைகளில், பொதுவானது பொடுகு தொல்லை. குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. குளிர்காலத்தில் உச்சந்தலையின் வறட்சியே, பொடுகுக்கு காரணமாகிறது. பொடுகு பிரச்சனை அதிகமாகும்போது, ​​அது வெள்ளை நிற துகள்களாக மாறி முடியிலிருந்து விழ ஆரம்பிக்கும். பொடுகு பிரச்சனையைச் சமாளிக்க பல்வேறு வகையான ஷாம்புகள், கண்டிஷனர்கள், எண்ணெய்கள் மற்றும் முடி பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இதில் உள்ள இரசாயனங்களால் முடி சேதமடைய வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் சில இயற்கையான பொருட்களின் உதவியோடு பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சையின் பயன்பாடு பொடுகைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனையை நீக்குகிறது. எலுமிச்சையைப் பயன்படுத்தி பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

பொடுகுக்கு எலுமிச்சை மற்றும் கற்றாழை ஜெல்

நம் சருமத்திற்கும் தலைமுடிக்கும் ஏராளமான நன்மைகளைத் தரக்கூடியது கற்றாழை. கற்றாழையில் வைட்டமின் A, B, E மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல்லை தலைமுடிக்கு தடவுவது கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடக் கற்றாழை ஜெல்லை எலுமிச்சையுடன் கலந்து தடவலாம். இதனால் பொடுகு பிரச்சனை நீங்கி, கூந்தல் வலுவடையும். இதற்கு இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு எலுமிச்சையின் சாறை சேர்க்கவும். இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இதனைப் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை சில நாட்களில் நீங்கிவிடும்.

பொடுகுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

பொடுகு பிரச்சனையைச் சமாளிக்க எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, ஆன்டி ஆக்சிடன்ட் பண்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பொடுகுகளை நீக்க உதவுகிறது. பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துகொள்ளுங்கள், அதில் ஒரு எலுமிச்சையின் சாறை கலக்கவும். இப்போது அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, சுமார் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு லேசான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இப்படி 1 மாதத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்கி முடி பட்டுப் போல மாறும்.

பொடுகுக்கு கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை

பொடுகுத் தொல்லையைப் போக்க கடுகு எண்ணெயை எலுமிச்சையுடன் கலந்து தடவலாம். கடுகு எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதில் இருக்கும் தனிமங்கள் மூலமாகத் தலைமுடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. கடுகு எண்ணெயில் எலுமிச்சை கலந்து தடவினால், தலைமுடியில் படிந்திருக்கும் அழுக்குகள் சுத்தமாகி, பொடுகுத் தொல்லை தீரும். இதற்காக, ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் ஒரு எலுமிச்சையின் சாறைக் கலக்கவும். இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவி சுமார் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.இதனைப் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை சில நாட்களில் நீங்கிவிடும்.

பொடுகு பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், எலுமிச்சையைப் பயன்படுத்துவது சிறந்த பலன் தரும். பொடுகுத் தொல்லை நீங்க, கற்றாழை ஜெல், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எலுமிச்சையுடன் கலந்து தடவலாம். இது தலைமுடியை சுத்தம் செய்து பொடுகு பிரச்சனையை நீக்குகிறது.

Image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்