நமது உடல் மற்றும் மனம் இரண்டும் இணைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே, நீட்சி என்பது உடல் நல ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலை நீட்சியடையச் செய்யும் போது என்டோர்பின்கள் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது நரம்பு மண்டலத்தில் உள்ள ஏற்பிகளைத் தூண்டி, மூளையில் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஹார்மோன்களைக் குறைக்கிறது. மேலும், உடலை நீட்சியடையச் செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த நீட்சியானது எவ்வாறு மன நல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதை விரிவாகக் காணலாம்.
ஸ்ட்ரெட்சிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நீட்சி அல்லது ஸ்ட்ரெட்சிங் செய்வதால் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சில வழிகளைக் காணலாம்.

உடல் மற்றும் மனதை அழுத்தமில்லாமல் வைத்தல்
உடலை நீட்சியடையச் செய்யும் போது அது உடல் மற்றும் மனம் இரண்டையும் ஓய்வெடுக்கச் செய்கிறது. இதன் மூலம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. நீட்சி பயிற்சிகளில் சுவாசப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அமைதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்திலிருந்து குணமடைவதற்கான 7 அறிகுறிகள்
இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்த
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க ஸ்ட்ரெட்சிங் உதவுகிறது. இது நேர்மறையான மனநிலையை உண்டாக்குகிறது. ஸ்ட்ரெட்சிங் சுய பராமரிப்பாக செயல்பட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் எதிர்மறைகளை நீக்கி நேர்மறையான எண்ணங்கள் நம் மனதில் தோன்றும்.

சரியான தூக்க சுழற்சி
சரியான தூக்கம் இல்லாதது மன ஆரோக்கியத்திற்கு கேடுதரும். அளவுக்கு அதிகமான வேலை நம் மனதையும் உடலையும் சமநிலைப்படுத்துவதில்லை. மனிதன் சராசரியாக 8 மணி நேரம் தூங்குவது நல்லது எனக்கூறுவர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இது சாத்தியமற்றதாகி விட்டது. இதனால், தூக்கமின்மையானது மனதில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன் ஆரோக்கியமற்ற சூழலுக்கு வழிவகுக்கும். இந்த தூக்க சுழற்சியை சரியாக்குவதில் எளிய உடற்பயிற்சியாக ஸ்ட்ரெட்சிங் உதவுகிறது. குறிப்பாக, தூங்கும் முன் ஸ்ட்ரெட்சிங் செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் சரியான தூக்கத்தைத் தருகிறது.
ஆற்றலை மேம்படுத்துதல்
ஸ்ட்ரெட்சிங் செய்வதால் உடலில் சுரக்கப்படும் என்டோர்பின் ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது. இதனை தினசரி வழக்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக ஆற்றல், நேர்மறையான எண்ணங்கள், தெளிவான மனம் உள்ளிட்டவற்றை அடைய முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?
Image Source: Freepik