how to do sex to get pregnant | பெரும்பாலான தம்பதிகள் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாகி விடுகிறார்கள். சிலர், கர்ப்பம் தரிக்க சில காலம் எடுக்கும். இதனால், அவர்கள் மன அழுத்தம், விரக்திக்கு ஆளாகிறார்கள். விரைவில் கருவுருவதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி இருக்காதீர்கள். விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான சில உதவிக்குறிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வேகமாக கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும், எந்த பொசிசன் சிறந்தது என்பது பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின் தகவல் படி, பெரும்பாலான தம்பதிகள் விரைவில் கருத்தரிக்க 6 மாதம் முதல் 158 நாட்களுக்குள் சுமார் 78 முறை உடலுறவில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருத்தரிக்க முயற்சிக்கும் பெரும்பாலானோர் போது உடலுறவு கொள்வதை ஒரு வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிலர் கருத்தரிக்க முடியவில்லையே என மன ரீதியிலான பிரச்சினைகளை சந்திப்பதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

பலர் கருத்தரிக்க செக்ஸ் பொசிஷனும் முக்கியம் என்பதை கண்மூடித்தனமாக நம்புகின்றனர். எனவே, அவர்கள் டாக்கி ஸ்டைல், மேன் ஆன் டாப், ஸ்பூன் பொசிஷன் ஆகியவற்றை முயற்சி செய்கின்றனர். இது மட்டும் அல்ல, விரைவில் கர்ப்பமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் 2 அல்லது 3 முறை உடலுறவு கொள்வார்கள். அப்படி செய்வது தவறு என்பது பலருக்கும் தெரியாது.
இந்த பதிவும் உதவலாம் : கர்ப்ப காலத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுகிறீர்களா? உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இதோ!
நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் கர்ப்பமாக முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு 1 முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபடக்கூடாது. பல முறை உடலுறவு வைத்தால் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். எனவே, கருத்தரிக்க முயற்சிப்பவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதே சமயம், பெண்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சிறந்தது அல்ல. அவர்களின் மாதவிடாய் காலம், கருப்பை, அண்டவிடுப்பு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், நீங்கள் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற அண்டவிடுப்பிற்கு ஐந்து நாள் முன் அல்லது அண்டவிடுப்பு அன்று உடலுறவு கொள்ளலாம்.
அண்டவிடுப்பிப்பை (Ovulation) எப்படி கணக்கிடுவது?

கருப்பையில் இருந்து முதிர்ந்த கருமுட்டை வெளியேறுவதையே அண்டவிடுப்பு என்கின்றனர். இது வெளியேறிய பிறகு, ஃபெலோபியன் குழாய்க்கு நகர்ந்து 12 முதல் 24 மணி நேரம் வரை அங்கேயே நிற்கும். இந்த சமயத்தில் உடலுறவு கொண்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருந்தால், உடலுறவுக்குப் பிறகு 5 நாட்கள் வரை பெண்ணின் இனப்பெருக்க பாதைக்குள் விந்துக்களால் உயிருடன் இருக்க முடியும். கருமுட்டை வெளிவரும் சமயத்தில் ஃபெலோபியன் குழாய்களில் விந்தணுக்கள் உயிருடன் இருந்தால், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த பதிவும் உதவலாம் : கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?
உங்களுக்கு மாதவிடாய் காலம் 28 நாட்கள் சுழற்சியில் இருந்தால் அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு 14 வது நாளில் உங்களுக்கு அண்டவிடுப்பு நிகழும். அனைவருக்கும் இந்த நாட்கள் கட்டாயம் நிகழும் என கூற முடியாது. ஒருவேளை உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், மாதவிடாய் நாளில் இருந்து உங்கள் அண்டவிடுப்பை அறிந்துக்கொள்ளலாம்.
Image Source: Freepik