How To Use Curry Leaves For Hair Growth: இன்று பலரும் சந்திக்கக் கூடிய தலைமுடி பிரச்சனைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்த தலைமுடி பிரச்சனைகளைத் தீர்க்க ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை ஆகும். இந்த கறிவேப்பிலை ஒன்றை வைத்து கூந்தலின் மொத்த பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும். இதில், நீளமாக முடி வளர விரும்புபவர்களுக்கு அடர்த்தி குறையாமல் அழகான கூந்தலைப் பெற கறிவேப்பிலை உதவுகிறது. மேலும் இவை கூந்தலின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கூடுதலாக இவை நரைமுடி வளராமல் தடுத்து, முடிக்கு கருமை நிறத்தை அளிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை எவ்வாறு உதவுகிறது
கறிவேப்பிலை கொண்டு முடி தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இவை கூந்தலில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்கிறது. தலைமுடிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.
கறிவேப்பிலை சாப்பிடுவது
தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் 6 கறிவேப்பிலை இலைகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைத் தருகிறது. மேலும், கறிவேப்பிலையில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துகள் கண் பார்வை குறைபாட்டிற்கு உதவுகின்றன. மேலும் இவை கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதற்கு கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதமே காரணமாகும். இவை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தலுக்கு ஈரப்பதத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
கறிவேப்பிலை ஹேர்பேக்
தலை முடிக்கு ஹேர்பேக் பயன்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்வாறு ஹேர்பேக் பயன்படுத்துவது முடி வளர்ச்சியுடன், வலிமையைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இவற்றைச் சிறப்பாக செய்யவே கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலை ஹேர்பேக் எப்படி செய்வது
சிறிதளவு கறிவேப்பிலையை நீரில் ஊறவைத்து, தயிர் மற்றும் சிறிது மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வறட்சி முடியைக் கொண்டிருப்பவர்கள் இதனுடன் வைட்டமின் இ ஆயில் மாத்திரை 3 முதல் 5 வரை சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் பசை கூந்தலுக்கு எண்ணெய்க்குப் பதில் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். இதை பயன்படுத்துவதற்கு முன் கூந்தலை சுத்தமாக அலச வேண்டும். ஏனெனில் கூந்தலில் அழுக்கு படிந்திருப்பின் இவை கூந்தலில் ஒட்டுவதில் சிரமம் ஏற்படும். இந்த ஹேர்பேக்கை முடியின் ஆழத்திலிருந்து வேர்வரை நன்கு தேய்த்து 2 அல்லது 3 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் சுத்தமான நீரில் ஷாம்பு சேர்க்காமல் சுத்தமான நீரில் அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வர தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!
இளநரை பிரச்சனையைத் தீர்க்க
கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இளநரை பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இயற்கை பொருளான கறிவேப்பிலை பயன்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே நரைமுடி உண்டாவதைத் தடுக்கலாம்.
கறிவேப்பிலை தைலம்
தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து பயன்படுத்த தலைமுடி கருமையாகவும், நீளமாகவும் வளரும். கறிவேப்பிலையின் காம்பை நீக்கி, அதை தேங்காய் எண்ணெயுடன் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை பாட்டிலில் ஊற்றி தினமும் கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தடவி வர முடி கருமையாகவும், நீளமாகவும் வளர்வதைக் காணலாம்.
இது போன்று முறைகளைப் பயன்படுத்தி கறிவேப்பிலையை சிறப்பான முறையில் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!
Image Source: Freepik