Flaxseed Hair Growth: முடி நீளமாக வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Flaxseed Hair Growth: முடி நீளமாக வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது?

How To Use Flaxseed For Hair Growth: ஆளி விதைகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது. இதில் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. ஆளி விதைகளில் வைட்டமின் பி, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது மென்மையான முடி அமைப்பை பராமரிப்பதுடன், முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இப்போது இயற்கையான வீட்டு வைத்திய முறையான ஆளி விதையை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஏன் ஆளி விதை

ஆளி விதை முடி வளர்ச்சிக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது. இது வைட்டமின் ஈ நிறைந்த ஆதாரமாகும். இதன் வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது மேலும், முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. ஆளி விதையில் உள்ள வைட்டமின் பி சத்துகள் முடியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய பாலி அன்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் ஆளி விதையில் உள்ளன. எனவே, முடி வளர்ச்சிக்கு ஆளி விதைகள் பெரிதும் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Fish Oil for Hair: முடி வளர்ச்சிக்கு மீன் எண்ணெயின் சில ஆரோக்கியமான நன்மைகள்

முடி வளர்ச்சிக்கு ஆளி விதையை எவ்வாறு பயன்படுத்துவது?

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

ஆளி விதை ஜெல்

முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்க ஆளி விதை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

தேவையானவை

  • ஆளி விதைகள் – 1 கப்
  • வடிகட்டிய நீர் – 2 கப்
  • எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
  • செய்முறை

    • தண்ணீர் மற்றும் ஆளி விதைகளை நன்கு கெட்டியாகும் வரை பாத்திரம் ஒன்றில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
    • எலுமிச்சைச் சாறு சேர்த்து திரவத்தை கலக்கி ஜெல் போன்ற நிலைத்தன்மை அடைந்த பிறகு வெப்பத்தை அணைக்க வேண்டும்.
    • பின், குளிர்வித்து ஜெல்லை வடிகட்டி சேகரிக்க வேண்டும்.
    • தினமும், காலையில் இந்த ஜெல்லை முடியில் அப்ளை செய்வதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
    • இந்த பதிவும் உதவலாம்: Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

      ஆளி விதை எண்ணெய்

      ஆளி விதையிலிருந்து எண்ணெயை முடிக்கு பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆளி விதை எண்ணெயை முடிக்கு பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.

      தேவையானவை

      • ஆளி விதை எண்ணெய் – 2 தேக்கரண்டி
      • சூடான துண்டு
      • செய்முறை

        • ஆளி விதை எண்ணெயை சிறிது சூடாகும் வரை சில நொடிகள் அடுப்பில் வைக்கவும்.
        • பிறகு இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி சுமார் 15 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம்.
        • இது முடி நீளத்திற்கு பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது.
        • பிறகு, தலைமுடியை சூடான துண்டு பயன்படுத்தி போர்த்தி விட வேண்டும். சூடான துண்டு என்பது துண்டை அடுப்பில் வைத்து சூடாக்கலாம் அல்லது வெந்நீரில் நனைக்கலாம்.
        • இவற்றை 30 நிமிடம் வரை இவ்வாறு வைத்து ஷாம்பூ கலந்து தலைமுடியைக் கழுவ வேண்டும்.
        • இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வர முடி வளர்ச்சி அடைவதைக் காணலாம்.
        • இவ்வாறு, முடி வளர்ச்சிக்கு ஆளி விதை ஜெல் மற்றும் ஆளி விதை எண்ணெய் இரண்டும் உதவுகின்றன.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்