மருந்துகள் இல்லாமல் சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் என்று விளம்பரங்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் இது சாத்தியமா? வாருங்கள் பார்ப்போம்.
வாழ்க்கை முறை நோய்களில், சர்க்கரை நோயும் மிக முக்கியமான ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளையும் கூட இந்த சர்க்கரை நோய் விட்டு வைப்பதில்லை. உடலால் இன்சுலினை முழுமையாக உற்பத்தி செய்ய அல்லது பயன்படுத்த முடியாமல் போகும் நிலையில் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதன் விளைவாக, பக்கவாதம், சிறுநீரகம் அல்லது இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படலாம். சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகுறித்து பல தவறான வதந்திகள் பரவி வருகின்றன. ஒருபோதும் சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்று சிலர் நம்புகிறார்கள். இதற்கு எதிர்மறையாக, ஒரு சிலர் சர்க்கரை நோயை மருந்துகள் மற்றும் உணவு முறைகளால் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். உண்மையில், மருந்துகளின்றி சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? இக்கேள்விக்கான விடையை, பாராஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறை டாக்டர் பி.வெங்கட கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
டாக்டர் வெங்கட் அவர்களின் கருத்துப்படி, வாழ்க்கை முறை, வயது, இரத்த சர்க்கரை அளவு மற்றும் வயது போன்ற காரணிகளால் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்புகள் ஏற்படலாம். சர்க்கரை நோயைச் சில நாட்களில் குணபடுத்தி விடலாம் என்று கோரும் பல விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்த்திருப்போம். ஆனால் இது உண்மை தானா என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
காலப்போக்கில் சர்க்கரை நோய் தொடரலாம்
காலப்போக்கில், தொடரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கலாம். மருந்துகளின்றி அது தானாகவே குணமாகிவிடும் என்று எண்ணுவது தவறு. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால், அது முதல் கட்ட சர்க்கரை நோயாக இருந்தாலும் சரி, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தாவிட்டால், அது குணமாகாது, தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியம்