கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!

  • SHARE
  • FOLLOW
கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!

தாயாகப் போகிறோம் என்று தெரியும் அந்த ஒரு கணம் பெண்ணின் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு உணர்வு. கவனமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் ஒரு சிறு தவறும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கருச்சிதைவைத் தவிர்ப்பதற்கான வழிகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தவொரு பெண்ணுக்கும், கருச்சிதைவு ஏற்படுவது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேதனை அளிக்கிறது. ஒரு பெண் கருச்சிதைவுக்குப் பிறகு உடல் ரீதியாகக் குணமடைய குறைந்தது 2 முதல் 3 வாரங்கள்வரை ஆகலாம்.கர்ப்ப காலத்தில் பரிசோதனையைத் தவிர்ப்பது அல்லது ஹார்மோன் மாற்றங்களைக் கவனிக்காமல் விடுவது போன்ற தவறுகளால் கருச்சிதைவு அபாயம் அதிகரிக்கிறது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். இதைப் பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா சர்மாவிடம் பேசினோம்.

1. தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்

  • கருச்சிதைவை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை, ஆனால் அதன் ஆபத்தைக் குறைக்கலாம்.தேவையான பரிசோதனைகளின் உதவியுடன் ஆபத்தைக் குறைப்பது சாத்தியமாகும்.
    • கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்திய பிறகு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
      • அல்ட்ராசவுண்ட், இரத்த பரிசோதனை, மரபணுச் சோதனை போன்ற பல சோதனைகள் இதில் அடங்கும். இதற்கு முன் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு, FSH, புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களைப் பரிசோதிக்க பரிந்துரைக்கப்படுவாதாக டாக்டர் தீபா சர்மா கூறியுள்ளார்.
        • அதே சமயம், கர்ப்ப காலத்தில் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தால் மரபணுச் சோதனை மற்றும் டார்ச் சோதனை செய்து கொள்வது நல்லது.
          • கர்ப்ப காலத்தில் மன அழுத்தமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றி மன அழுத்தத்தைத் தவிர்க்குமாறு பெண்கள் அறிவுறுத்தபடுகிறார்கள். இது தவிர, மனநல ஆலோசனை பெறவேண்டியதும் முக்கியம்.
          • 2. கர்ப்ப காலத்தில் நோய்களைத் தவிர்க்கவும்

            • கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோய் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
              • இது தவிர, கர்ப்ப காலத்தில் தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் சம்பந்தமான நோய்களையும் தவிர்க்க வேண்டும்.
                • 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். நீங்கள் இதற்கு முன் கருச்சிதைவுக்கு ஆளாகியிருந்தால், அடுத்த கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், கருமுட்டை எண்ணிக்கை மற்றும் தேவையான இதர சோதனைகளைச் செய்துக்கொள்ளுங்கள்.
                • 3. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

                  • கர்ப்ப காலத்தில் பசுமையான காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த முட்டை மற்றும் பால் சார்ந்த பொருட்களைச் சாப்பிடுவதால் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
                    • கர்ப்ப காலத்தில் சுமார் 2200 கலோரிகள் வரை தேவைப்படுகின்றன. உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு, உணவு அட்டவணையைத் தீர்மானிக்கவும்.
                    • 4. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி

                      • கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது எல்லா வகையிலும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான கருவுக்கு, யோகா, நடைபயிற்சி மற்றும் இலகுவான உடற்பயிற்சி செய்யுமாறு கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
                        • கர்ப்ப காலத்தில் கனமான பொருட்களைத் தூக்குவதை தவிர்க்கவும். மேலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி தீவிர உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.
                          • கருச்சிதைவு ஏற்படுவதைத் தவிர்க்க, தினமும் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள்வரை உடற்பயிற்சி செய்யுங்கள்.
                          • 5. புகைபிடிப்பதை தவிர்க்கவும்

                            • கருச்சிதைவு ஏற்படுவதைத் தவிர்க்க, புகைபிடிக்க வேண்டாம். இது கருவில் இருக்கும் சிசுவிற்கு மோசமான விளைவை ஏற்படுத்திக் கருச்சிதைவுக்கு வழிவகுக்கிறது. கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பதால் கருச்சிதைவு ஏற்படாவிட்டாலும், வேறு பிரச்சனைககளை ஏற்படுத்தக்கூடும்.
                              • கர்ப்ப காலத்தில் புகைபிடிக்கும் தாய்மார்களின் குழந்தைகள் எடை குறைவாகவோ அல்லது சில குறைபாடுகளுடனும் பிறக்க வாய்ப்பு இருக்கிறது மது அருந்துவதும் கருச்சிதைவை ஏற்படுத்க்கூடும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும்.
                              • கருச்சிதைவைத் தவிர்க்கத் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் மற்றும் அசாதாரண அறிகுறிகளைக் கவனியுங்கள். இந்தப் பதிவில் கூறிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கருச்சிதைவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்