How to Calm a Crying Baby: பச்சிளம் குழந்தைகள் அழுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அவைகளில் முக்கியமான காரணமாக இருப்பது பசி ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் சிறிய வயிறுகளைக் கொண்டிருக்கும் மேலும் விரைவாக வளரும் தன்மையைக் கொண்டிருக்கும். இதனால், இரவில் பல முறை எழுந்து குழந்தைகளுக்கு உணவூட்டுவதுடன், அவர்களின் அழுகையை நிறுத்த நாள்தோறும் போராடுவர்.
தேசிய தூக்க அறக்கட்டளையின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு தினந்தோறும் 14 முதல் 17 மணி நேரம் வரையிலான தூக்கம் தேவைப்படுகிறது. குழந்தைகள் வளர வளர, அவர்களின் தூக்கப் பழக்கம் மாறும். அதாவது தூங்குவதற்கான நேரம் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Growth In Children: குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவுப் பட்டியல் இங்கே..
குழந்தை அழுவதற்கான காரணங்கள்
குழந்தைகள் அணிந்திருக்கும் டயபர், அறையின் வெப்பநிலை, போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு அசௌகரியங்கள் உண்டாகலாம். முன்னரே கூறியவாறு, குழந்தைகள் அழுவதற்கு முக்கிய காரணமாக பசியுணர்வு இருக்கலாம். இதைத் தவிர மற்ற சில காரணங்களும் உள்ளன. அவற்றைப் பற்றிக் காண்போம்.
உடல் அசௌகரியத்துடன் இருப்பது
குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்படும் போது, குழந்தை தூங்குவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதன் பொதுவான காரணங்களாக, டயபர் அணிந்திருக்கும் நிலை, அறை மிகக் குளிராக அல்லது சூடாக இருத்தல், இறுக்கமான ஆடை உள்ளிட்டவை ஆகும்.
வளர்ச்சி வேகம்
வளர்ச்சி வேகம் என்பது பிறந்த குழந்தையின் எடை மற்றும் உயரத்தில் திடீர் வளர்ச்சியை அனுபவிக்கக்கூடிய குறுகிய காலம் ஆகும். இந்த வளர்ச்சி வேகத்தை அனுபவிக்கும் போது குழந்தைகள் சங்கடமாகக் காணப்படும்.
ஆரோக்கியமற்ற நிலை
குழந்தைகள் அழுவதற்கான காரணங்களில் ஆரோக்கியமற்ற நிலையும் முக்கியமான காரணமாகும். இந்த நேரத்தில் அவர்கள் வழக்கத்தை விட அதிகமாக அழுவர். குறிப்பாக சளி, காது நோய்த்தொற்றுகள் மற்றும் வயிற்றில் பிரச்சனை போன்றவை இரவில் குழந்தை அழுவதற்கான காரணங்களாக அமைகிறது.