Anger Control Tips: ரௌத்திரம் பழகுவது அவசியம் என்றாலும் இடம், பொருள், ஏவல் கண்டறிவது என்பது மிக முக்கியம். பலரும் தங்களது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல சிக்கலை சந்திப்பார்கள். கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவரால் எதையும் எளிதாக சாதித்து விட முடியும். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் கோபப்படுவார்கள். மிகவும் அமைதியான, குளிர்ச்சியான மற்றும் இணக்கமான நபர் கூட ஒரு கட்டத்தில் கோபப்படுவார். சிலருக்கு அதிக கோபம் வரும். எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாது. சில வழிமுறைகளை பின்பற்றினால் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கோபம் குறைக்க சிம்பிள் டிப்ஸ்
சோகம், மகிழ்ச்சி, வலி போல் கோபமும் ஒரு உணர்வு தான். கோபம் வராதவர் என்று யாரும் இல்லை, ஒவ்வொருவரும் எப்போதாவது ஒரு கட்டத்தில் கோபப்பட வேண்டியவர்கள் தான். கோபம் வந்தால் கையில் இருக்கும் எந்தப் பொருளையும் தூக்கி எறிந்துவிட்டு வாய்க்கு வந்ததை பேசுவார்கள். விட்ட வார்த்தையை திரும்பப் பெற முடியாது, கோபத்தில் பேசிய வார்த்தைகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் ஏராளம். கோபம் என்ற உணர்வு ஏற்படும் போது நாம் செய்யும் செயலே நமக்கு தெரியாது.
இதையும் படிங்க: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
உடல்நல பிரச்சனைகளும் ஏற்படலாம்
கோபம் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவை அதிகரிப்பதோடு பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கவும் வழிவகுக்கிறது. கோபப்படுபவர்களுக்கு அதிக தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வேகமான சுவாசம் உள்ளிட்டவை இருக்கும். சாதாரணமாக அமைதியாக இருப்பவர்களை விட கோபம் கொண்டவர்கள் அதிக கவலை மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பார்கள். கோபத்தால் பல மனநலக் கோளாறுகள் ஏற்படும்.
மோனோஅமைன் ஆக்சிடேஸ்
மோனோஅமைன் ஆக்சிடேஸ் ஏ (எம்ஏஓஏ)" என்ற நொதியும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நொதி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. குறைந்த அளவு கொண்டவர்கள் கோபப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் நம்புகின்றனர். சில எளிய வழிகளை பின்பற்றினால் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து குறைக்கலாம்.
கோபத்திற்கான காரணங்கள்
முதலில், நமக்கு கோபத்தை உண்டாக்குவது எது என்பதைக் கண்டறிவது. நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பது நல்லது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், தனிப்பட்ட மருத்துவர், பள்ளி ஆசிரியர் போன்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இது உங்களை கோபப்படுத்தும் சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய புரிதலை உங்களுக்கு வழங்கும். இதனால் கோபத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
டீப் ப்ரீத்
ஆழ்ந்த சுவாசம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது, மகிழ்ச்சியடையச் செய்கிறது, விழிப்புணர்வை அதிகரிக்கிறது, அதோடு கவலை, மனச்சோர்வு, கோபம் மற்றும் குழப்பத்தைக் குறைக்கிறது. நீங்கள் கோபமாக உணரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது.. ஆழ்ந்த மூச்சை எடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களைத் தொந்தரவு செய்யும் தலைப்பில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைத் திருப்புங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கோபம் குறைந்து குளிர்ச்சி அடைவீர்கள்.
நடைபயிற்சி
நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. உங்களுக்கு கோபப் பிரச்சினைகள் இருந்தால் நடைபயிற்சி ஒரு நல்ல சிகிச்சையாக உதவும். நடைபயிற்சி உங்கள் தசைகளை தளர்த்துகிறது, உங்களை அமைதியாக வைத்திருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது பற்றி சிந்திக்க நடைபயிற்சி உகந்த வழிகள் ஆகும்.
மியூசிக் கேளுங்கள்
இசையைக் கேட்பது மனதை அமைதிப்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மெல்லிசைப் பாடல்கள் மன அமைதியையும் தளர்வையும் தருகின்றன. நீங்கள் கோபமாகவும் கவலையாகவும் உணரும்போது, இசையை கேளுங்கள்.
உங்களோடு நேரத்தை செலவிடுங்கள்
உங்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியம். பகலில் உங்களுடன் நேரம் செலவிடுங்கள். அமைதியாக இருந்து சரியான முடிவுகளை எடுக்கவும். தனியாக வேலை செய்வது உங்கள் சொந்த உணர்வுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள உதவும். உங்களை நீங்களே ரசிக்கத் தொடங்குங்கள் உங்கள் செயல்பாடுகளை உணர்ந்து ரசித்து செய்யுங்கள், இது உங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கை மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே
இதுபோன்ற பல வழிகள் கோபத்தை குறைக்கவும் கட்டுக்குள் வைக்கவும் உங்களுக்கு உதவும் என்றாலும் அடிக்கடி கோபமோ ஏதேனும் தீவிரமோ உணரும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik