Natural Remedy For Cracked Mouth Corners: சிலருக்கு வாயில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதை உணர்ந்திருப்பர். குறிப்பாக, குளிர்காலத்தில் வாயில் வெடிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. உதடுகளின் மூலைகளில் உள்ள மென்மையான தோல் எரிச்சலடைதல், அழற்சி மற்றும் பிளவுகள் ஏற்படுவது போன்றவை ஏற்படும். இது போன்ற நிலையானது ஆங்குலர் சீலிடிஸ் என அழைக்கப்படுகிறது. இது ஒருவருக்கு அசௌகரியத்தையும், தாங்க முடியாத வலியையும் ஏற்படுத்தும். எனவே, தோலில் கடுமையான வலி ஏற்படுமாயின், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும். இல்லையெனில் வீட்டிலேயே பயன்படுத்தும் சில எளிய வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெற முடியும்.
வாயில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்துவதற்கான வீட்டு வைத்தியம்
சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் வாயில் ஏற்படும் வெடிப்பைக் குணப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Honey for kids cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!
கற்றாழை ஜெல்
இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை ஜெல் பல வித நன்மைகளைத் தருகிறது. இந்த ஜெல் ஆனது குளிரூட்டும் பண்புகளைக் கொண்டு வாயின் வெடிப்பினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. புதிய கற்றாழையில் இருந்து ஜெல்லைத் தனியாகப் பிரித்தெடுத்து, அதனை வாயின் வெடிப்புப் பகுதியில் தடவி 15 நிமிடம் வரை வைக்கவும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
தேன்
தேன் ஒரு இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது. இதில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் வாயின் வெடிப்புப் பகுதியை குணப்படுத்தும் தன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயில் விரிசல் உண்டாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், சாத்தியமான தொற்றுகளையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விட வாயின் விரிசல் விரைவில் குணமாவதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய்
இயற்கையான ஈரப்பதத்தையும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டதாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதை வாயின் வெடிப்பு பகுதியில் தடவுவதன் மூலம், பாதிக்கப்பட்ட இடத்தை நீரேற்றம் செய்ய உதவுகிறது. மேலும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் விரைவில் நிவாரணம் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Knee Pain Remedies: மூட்டு வலி காணாமல் போக சிம்பிள் டிப்ஸ்!
வைட்டமின் ஈ ஆயில்
இவை காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி தோலை சரி செய்யலாம். மேலும், இவை புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாகும். வெடிப்பு ஏற்பட்ட வாய் பகுதிகளில் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைத் திறந்து அதில் உள்ள எண்ணெயை வைக்கவும். இவை தோல் வெடிப்புகளைச் சரி செய்ய உதவுகிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட காய்கறி வகையாகும். இவை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், வாயின் மூலைகளில் ஏற்படும் விரிசல் அல்லது வெடிப்புகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை ஈரப்பதத்துடன் வைத்து வீக்கத்தைக் குறைக்கலாம். வாயின் ஓரங்களில் ஏற்படும் விரிசல்களை குணமாக்க வெள்ளரி துண்டுகளை சுமார் 15 நிமிடங்கள் மெதுவாக வைக்கவும்.