How To Deal With Past Bad Memories: நம் வாழ்வில் சில நினைவுகள் நம்மை உள்ளுக்குள் எப்போதும் காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி அந்த பழைய விஷயங்களை நினைத்து வருந்துவோம் அல்லது அழுவோம். கடந்த கால நினைவுகளால் தவிப்பது ஆபத்தான விஷயம் அல்ல. ஆனால் அது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்தால், கவலைக்குரிய விஷயம்.
ஏனென்றால், இது உங்களை மனதை மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும். நீங்களும் கசப்பான விஷயங்களால் தவித்துவந்தால், நாங்கள் உங்களுக்கு சில உதவிக்குறிப்புகளை கூறுகிறோம். அது உங்களை மீட்டெடுக்க உதவும். கடந்த காலத்தை நினைவுகூரும் போது உங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : சோர்வை எவ்வாறு நிர்வகிப்பது தெரியுமா? வாங்க பாக்கலாம்..
காரணத்தை கண்டுபிடியுங்கள்

ஒரு விஷயத்தில் இருந்து நாம் மீண்டு வர, அதற்கான காரணம் மிகவும் அவசியம். ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் இன்னும் வைத்துள்ளீர்கள் என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் அதற்காண காரணத்தை கண்டு பிடித்தால் மட்டும் தான் நம்மால் அதற்கான தீர்வை கண்டறிய முடியும். எனவே, கடந்த காலத்தில் என்ன நடந்தது யார் மீது தவறு என்ற காரணத்தை கண்டுபிடிப்பது நல்லது.
நடந்தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்

பல சமயங்களில் நமக்கு என்ன நடந்தது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எனவே, உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும், எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Anxiety Sign: அதிகமாக செயல்படும் கவலையின் 5 அறிகுறிகள்?
பிடித்த விஷயங்களில் கவனம்
உங்கள் பிரச்சினைகளை உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு நிறைய நிம்மதியைத் தரும். மேலும், உங்களுக்கு பிடித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள், இது உங்கள் கடந்த கால நினைவுகளிலிருந்து வெளிவர உதவும்.
கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கவும்

கடந்த காலத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்திருந்தால், அது உங்களுக்கு அதிக வழியை கொடுக்கும். எனவே, உங்கள் கவனத்தை அதிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்யுங்கள். பழைய விஷயங்களைப் புறக்கணிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை நீங்களே தேடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : மனநிலையை புத்துணர்ச்சியோடு வைக்க தினசரி இதை செய்யுங்கள்!
தேவையான நேரம் கொடுங்கள்
கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதும் உங்களுக்கு நரகமாக இருக்கலாம். அதிலிருந்து முழுமையாக மீண்டு வர சிறிது காலம் எடுக்கும். எனவே, அதற்கு தேவையான காலத்தை கொடுங்கள். அந்த காலம் உங்களை மூவ் ஆன் ஆக உதவும்.
மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்
உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருந்தால், மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள். முறையான சிகிச்சை மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
Pic Courtesy: Freepik