மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். இந்த நவீன வாழ்க்கை முறையில், மக்கள் (குறிப்பாக ஆண்கள்) பல்வேறு வகையான சப்ளிமெண்ட்ஸ் (மருந்துகளில் இருந்து) எடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் மெலிந்த மற்றும் பலவீனமான உடலை, சமநிலையாக மாற்ற முயல்கிறார்கள். ஏனெனில், இதனால் பள்ளி முதல் கல்லூரி வரையும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் பல சங்கடங்களை சந்தித்து வருகிறார்கள்.
ஆரோக்கியமற்றதாக இருப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் இளைஞர்களின் அன்றாட வாழ்வில் உள்ள சில தீங்கான பழக்கங்கள் அடங்கும். இந்த பழக்கங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உட்புறத்திலும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய பழக்கவழக்கங்களால், பெரும்பாலான இளைஞர்களின் உடல் பலவீனமாகவும், மெலிந்ததாகவும் இருக்கும். அவர்களில் நீங்களும் இருந்தால், அதிகமாக சாப்பிடுபவர்கள் ஆனால் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் சில பழக்கங்களை தவிர்க்கவும். அப்போது தான் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் ஆரோக்கியமாக உடலை பராமரிக்க விரும்பினால், கீழ் கூறப்பட்டுள்ள இரண்டு பழக்கங்களையும் உடனடியாக விட்டுவிட வேண்டும்.
கைவிட வேண்டிய பழக்கங்கள்:
உணவை தவிர்ப்பது:
தற்போது மக்கள் வேலையில் மும்முரமாகி விட்டதால், பெரும்பாலானோர் பணி அழுத்தம் காரணமாக சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். பொதுவாக நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், வேலையின் அழுத்தம் காரணமாக, பசி ஏற்படும் போது உணவைத் தவிர்த்து விடுகிறோம். இதனால் பசி தானாகவே அடங்கிவிடுகிறது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி பசி எடுப்பதும் நின்றுவிடும். சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது நம் உடலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், பலர் உணவை உண்ணும் போது தேநீர் அருந்துவதால் பசி மறைந்துவிடும். உணவுடன் கூடிய தேநீர் வாயு மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்னைகளை ஏற்படுத்தும். இது மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
ஜின் பயிற்சிகளை மீண்டும் செய்வது:
இன்றைய காலத்தில் ஆண்களுக்கு ஜிம் தான் கூடாரமாக உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, உடலைக் கட்டமைக்கவும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் எளிய வழியாக இது திகழ்கிறது. உடல் கட்டமைப்பின் செயல்பாட்டிற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது தசைகளை உருவாக்க உதவினாலும், அதன் பக்க விளைவுகள் பின்னர் வெளிப்படுத்தும். மற்றவர்கள் உடலை உருவாக்குவதைப் பார்த்து பொறாமை மற்றும் போட்டி உணர்வுடன், பல இளைஞர்கள், இந்த பயிற்சியை செய்யத் தொடங்குகிறார்கள்.
பலர் ஜிம்முக்கு சென்று தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் வலுவிழந்து விடுகின்றன. அதே உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அது உங்கள் உடலை சேதப்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
Image Source: Freepik