உடல் பருமன் காரணமாக, உடலில் ஆங்காங்கே கொழுப்புகள் தேங்கி தசைகள் பெரியதாக இருக்கும். அதிலும், சிலர் உடல் எடைக்குறைவாகக் காணப்பட்டாலும், முகத்தின் தாடையின் கீழ்ப்பகுதியில் மட்டும் தசை அதிகமாகி இருப்பதைக் கானலாம். இந்த பிரச்சனைக்கு இரட்டைத் தாடை பிரச்சனை எனக் கூறுவர். இவற்றை எளிமையாக சில உடற்பயிற்சி முறைகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம். இதில், இரட்டைத் தாடை பிரச்சனைகளிலிருந்து விடுபட சில உடற்பயிற்சிகளைக் காணலாம்.
இரட்டைத் தாடை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள்
இரட்டைத் தாடை பிரச்சனை பொதுவாக எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றாகும். தாடைக்கு அடியில் அதிக அளவிலான சதை குவிந்து இருப்பதுடன் முகத்தின் தோற்றம் மாறி விடுகிறது. இரட்டைத் தாடை குறைப்பதற்கான சில பயிற்சி முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே
நாக்கை நீட்டுதல்
கழுத்தை நேராக வைத்து, நாக்கை முழுமையாக நீட்ட வேண்டும்.
பின் நாக்கை மேல் உயர்த்தி, மூக்கை நோக்கிச் செல்லவும்.
இவ்வாறு செய்யும் போது தசை சிறியதாகி விடும்.
நேரான தாடை
தலையைப் பின்னோக்கி சாய்த்து மேலே பார்க்கவும்.
நன்றாக நீட்டும் போது, கீழ் தாடையை முன்னோக்கி தள்ள வேண்டும்.
இவ்வாறு 15 விநாடி வரை வைத்திருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்
XO உடற்பயிற்சி
தலையை அசைக்காமல் வைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு வைத்து XO-ஐ மீண்டும் மீண்டும் உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு 15 வினாடிகள் இடைவிட்டு, குறைந்தது 5 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யலாம்.
பந்து உடற்பயிற்சி
கன்னத்தின் கீழ், சிறிய அழுத்தமான பந்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
கழுத்திற்கும், கன்னத்திற்கும் இடையில் வைத்த பந்தை 1 நிமிடம் வரை வைத்திருக்கலாம். இதன் மூலம் இரட்டைத் தாடை பிரச்சனையைக் குணப்படுத்த முடியும்.
இரட்டை கன்னத்தை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்
சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி தசையின் அளவைக் குறைக்க முடியும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
ஆலிவ் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அவற்றைத் தாடை மற்றும் கழுத்தில் மசாஜ் செய்து வர கன்னத்தின் கீழ் கொழுப்பு குறைக்கிறது.