Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

ஒருவருக்கு மனநிலை மேம்பாடு என்பது மிக முக்கியம். மனநிலை சரியாக இருந்தால் சுற்றுப்புறமும் சரியாக அமையும், எடுக்கும் முடிவும் சரியாக இருக்கும், செய்யும் வேலையும் சிறப்பாக இருக்கும். நம்மையும் மீறி ஏதாவது ஒரு சிந்தனையை நோக்கி மனதை அலைபாய்வது உண்டு. மனநிலை குழப்படையும் போது உடல்நிலை உட்பட அனைத்தும் பாதிப்பை சந்திக்கிறது. ஒருவர் மனநிலையை சமமாக வைத்திருப்பது மிக முக்கியம்.

மனநலத்தை ஆரோக்கியமாக வைக்க டிப்ஸ்

உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்பது, முகத்திற்கு மாஸ்க் அப்ளை செய்து முகத்தை கவனிப்பது, உடல் எடையை கூட விடாமல் தடுப்பது என பல்வேறு கவனிப்பை மேற்கொள்ளும் நாம் அனைத்துக்கும் அடிப்படையான மனதை கவனிப்பது இல்லை. மனதை நிலையாக வைத்திருப்பதற்கான டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சோர்வை எவ்வாறு நிர்வகிப்பது தெரியுமா? வாங்க பாக்கலாம்..

ஆரோக்கியமான தூக்கம்

ஆரோக்கியமான மனநிலைக்கு தூக்கம் என்பது மிக முக்கியம். தினசரி 6-8 மணி நேரம் தூங்கினால் போதும். ஆனால் தூக்கத்தின் தரமும் முக்கியமானது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த, உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் திரை நேரத்தைத் தவிர்க்கவும், உறங்கச் செல்வதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன் உங்களின் சொந்தச் செயல்பாடுகளைச் செய்யவும்.

சிலர் தங்கள் முடி மற்றும் சருமத்தை கவனித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். சிலர் மனதைக் கவரும் புத்தகத்தைப் படிக்க விரும்புகிறார்கள். சிலர் இசையை கேட்கிறார்கள். சிலர் தூங்குவதற்கு முன் தியானம் செய்கிறார்கள்.

பிறரிடம் பேசுவது நல்லது

தற்போது யாரும் மற்றவர்களுடன் நேரடியாக நல்ல உறவை வைத்துக் கொள்வதில்லை. சமூகவலைதளம், மெயில், சாட்டிங் என்று செல்கிறார்கள். அதில் ஒருவரிடம் நேரடியாக பேசும் முழு திருப்தியை தர இயலாது. மற்றவர்களுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். இவை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

உங்கள் அனுபவங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உணர்வுபூர்வமாக நெருங்க முயற்சி செய்யுங்கள். நல்ல உறவை உருவாக்குங்கள். சுற்றுப்புறத்தாரை பழக்கத்தோடு வைத்து பேசி மகிழுங்கள். குறிப்பாக உங்கள் குடும்பத்தாருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நண்பர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள். இவை அனைத்தும் மன நலத்தை மேம்படுத்தும்.

உடல் ஆரோக்கியம் முக்கியம்

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இது நமது மனநலத்தையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமாக இருப்பதற்கு மிகவும் நல்லது. நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது நமது மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஒர்க்அவுட், நடனம், யோகா, நடைப்பயிற்சி என உங்களுக்கு பிடித்த ஏதாவது செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.

புதுப்புது திறன்கள்

புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களுடன் இணைவீர்கள். நேரம் இல்லாவிட்டாலும் முயற்சிக்கவும்.

புதிய திறன் உங்கள் வாழ்வாதார தன்னம்பிக்கையை மேம்படுத்தி உங்களுக்கு நிம்மதி அளிக்கும். பிடிக்காததை முயற்சி செய்ய வேண்டாம். பிடித்த ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.

கிஃப்ட்ஸ் வழங்கலாமே..

உங்களுக்கு பரிசு கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறீர்களோ.. அந்த அளவுக்கு ஒருவருக்கு பரிசு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது உங்கள் மீதான நம்பிக்கையையும், பாசத்தையும் மற்றவர்களிடம் அதிகரிக்க உதவும்.

நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்

பலரும் கடந்த காலத்தை குறித்தும் எதிர் காலத்தை குறித்தும் கவலைப்படுவது உண்டு. நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். நேற்றும், நாளையும் நம் கையில் இல்லை ஆனால் இன்று நம் கையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பயிற்சியை தினசரி 1 மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நாளைய மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: உணர்ச்சி ரீதியாக நொருங்கியது போல் உணர்கிறீர்களா? அதற்கான 7 அறிகுறிகளும் உதவிகளும் இங்கே

எடுத்துக்காட்டாக பணியிடத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் தடுமாறினால் ஸ்போக்கின் இங்கிலீஷ் வகுப்பு உள்ளிட்டவைக்கு நேரம் ஒதுக்கி செல்லுங்கள். இப்படி நீங்கள் எதில் தரம் இழந்து இருக்கிறீர்கள் என்று உணர்ந்து அதை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறீர்களோ அப்போது உங்கள் மனநிலை ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த முறை உங்களுக்கு உதவும் என்றாலும் தீவிர சிக்கலை சந்திக்கும் போதோ அல்லது அதை உணரும் போதோ உடனே மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்