Tips To Increase Premature Baby Immunity: சாதாரண பிறந்த குழந்தைகளைப் போலல்லாமல், குறைமாத குழந்தைக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் 37 ஆவது வாரத்திற்கு முன்பே பிறக்கும் குழந்தை குறைமாதத்தில் பிறக்கும் குழந்தை எனப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. அதே சமயம், குறைமாத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் தேவைப்படுகிறது.
முழுமை பெறாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, குறைமாத குழந்தைகள், எளிதில் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் குறைந்த உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு கொண்ட நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளனர். குறைப்பிரசவத்திற்குப் பின்னால் முக்கிய காரணியாக விளங்கும் கருப்பையக அழற்சி, புதிதாகப் பிறந்த குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இவை நோய்க்கிருமிகளுக்கு எதிராக குழந்தைக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குருகிராம், மணிப்பால் மருத்துவமனை குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜி ஆலோசகர் மருத்துவர் சச்சின் ஜெயின் அவர்கள் குறைமாத குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
குறைமாத குழந்தைகளில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வழிகள்
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆன்டிபாடிகள் குறைவாக இருக்கும். இவை இரத்தத்தில் உள்ள பொருள்கள் ஆகும். இவை லேசான தொற்று நோய்களைத் தடுக்கலாம். எனினும், இவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி பல்வேறு நோய்களுக்கு எதிராகப் போராட முடியாததாக இருக்கும். டாக்டர் சச்சினின் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் குறைமாத குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை வீட்டிலேயே அதிகரிக்க சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
தடுப்பூசிகள்
பொதுவான நோய்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு குழந்தை தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம். இதில் குறைப்பிரசவ குழந்தையாக இருப்பின், அனைத்து தடுப்பூசிகளிலும் புதுப்பித்த நிலையில் இருப்பது அவசியம். இவை புதிதாக பிறந்த குழந்தையை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை நோய் தொற்றுக்கு எதிராகப் பாதுகாக்க தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரின் தேவையான தடுப்பூசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க
குறைந்த உடல் வெப்பநிலை
தாய் வெப்பநிலை அல்லது குறைந்த உடல் வெப்பநிலை, குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள், இறப்பு மற்றும் RDS போன்றவற்றின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும். இதற்கு, தாமதமான குளியல் வெப்பமடைதல் போன்றவற்றை உள்ளடக்கிய எளிய வெப்ப பராமரிப்பு உதவாது. போர்வைகள், ஓவர்ஹெட் ஹீட்டர்கள், கங்காரு மதர்கேர் உள்ளிட்ட புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உட்பட கூடுதல் வெப்ப பராமரிப்பு ஆதரவு அமைப்புகள் தேவையாகும்.
வெளிப்புறத் தூண்டுதல்களைத் தவிர்த்தல்
முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை எப்போதும் ஒரே இடத்தில் வைத்தல் கூடாது. ஆனால், சுர்றுச்சூழலுக்கும் பயணத்திற்கும் அவர்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது முக்கியம். வெளிப்புற தூண்டுதல்களைத் தவிர்ப்பதன் மூலம் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும், சளி, இருமல் பிரச்சனைகள் கொண்டிருப்பவர்களை குழந்தையின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. குறைமாத குழந்தை வெளியில் வெளிப்படுவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!
தாய்ப்பால்
குறைமாத குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கையாக அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தாய்ப்பால் ஆகும். பிறந்த குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நல்ல அளவிலான மூலக்கூறுகள் தாய்ப்பாலில் உள்ளது. இது பொதுவான நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. குறைமாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் உள்ளதால், இவை குடல் தொற்றுகளை கணிசமான அளவில் குறைக்கும்.
சுகாதாரம்
NICU பின்பற்றும் சில சுத்தமான மற்றும் சுகாதாரமான நடைமுறைகள் வீட்டிலும் பின்பற்ற வேண்டும். அதன் படி, குழந்தைகளின் ஆடைகளைத் தனித்தனியாக வைத்து சுத்தம் செய்வது, வெந்நீரில் துவைத்தல், குழந்தையைத் தொடும் முன், கழிப்பறையைப் பயன்படுத்திய பின், நாப்கின் மாற்றிய பின், தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பான மற்றும் தூய்மையான இடமாக மாற்றுவதன் மூலம் குறைமாத குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்
Image Source: Freepik